ஆலங்குடி: ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் இனியன். முன்னாள் ராணுவ வீரர். கடந்த 13 ஆண்டுகளாக நீரை மட்டுமே உணவாக எடுத்து வாழ்ந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட் டம், ஆலங்குடி வந்திருந்த அவர் கூறியதாவது: 2002 மார்ச் 15ம் தேதி முதல் நீர் உணவு முறைக்கு மாறிவிட்டேன். அது முதல் நீரை ஆகாரமாகவும், விண்வெளி, தூய்மையான காற்று, சூரிய சக்தி ஆகியவற்றில் இருந்து ஆற்றலை எடுத்துக் கொள்ளும் நிலைக்கு எனது உடல் பழக்கப்பட்டு விட்டது. அது ஆரோக்கியமாகவும் இயற்கை சார்ந்த விஷயமாகவும் உள்ளது. இது அதிசயம் அல்ல. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் அதுபோல் தான் இருக்கின்றனர். இந்தக் கலையை மற்றவர்களுக்குப் பரவச்செய்யவும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
வாழ்வில் ஒருமுறை நீருணவுப் பயிற்சியை எடுத்துக் கொண்டு விட்டால் போதும். அப்புறம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதில்லை. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவு முறைக்கு மாறிவிடலாம். எப்போது ஆரோக்கியமும் உணீடல் பலமும் நிம்மதியும் தேவைப்படுகிறதோ அப்போது தனக்குத் தானே கடைபிடித்துக் கொண்டால்போதும்.
நீருணவு உட்கொண்டால் மருத்துவமனைகள் தேவைப்படாது. இது உடல் சார்ந்த விஷயமல்ல. மனம் சார்ந்தது. மனதளவில் தயாராகி விட்டால் ஒவ்வொருவரும் யோகி தான். அதனால் இந்த வாழ்க்கை முறையை யோக வாழ்வு என்கிறோம். ஜீரண நீரை நிறுத்தாமலோ பசியைப் பொறுத்துக் கொள்ளும் பழக்கமோ இல்லாவிட்டால் விண்வெளிப் பயணம் சாத்தியமில்லை. விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்குப் புரிந்த மற்றவர்களால் அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தப் பயிற்சியை சாதாரண மக்களும் கடை பிடிக்கும் வண்ணம் இப்போது அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இதுதான் யோக மருத்துவம்.

No comments:
Post a Comment