Tuesday, October 7, 2014

எது நாகரீகம்??

கொண்டுவந்த அழகு எல்லாம்
கொண்டவனுக்கு மட்டும்னு தெரிஞ்சுக்க..
இறுக்கிப் பிடித்த உடையில் ஒரு
இன்பமில்லை புரிஞ்சுக்க..
உள்ளாடை வெளியேத் தெரிவது
வெட்கமுன்னு தெரிஞ்சுக்க..
அவிழ்ந்து விழும் கால்சட்டையில் ஒரு
அழகுமில்லை புரிஞ்சுக்க..
பாதம் பார்த்து நடப்பதொரு
பாவமில்லை தெரிஞ்சுக்க..
நீ நிமிர்ந்து நடக்கும் நடையில் ஒரு
நேர்மையில்லை புரிஞ்சுக்க..
பிடல் கேஸ்ட்ரோ பேசும் முன்னே உன்னைப்
பெத்தவனைத் தெரிஞ்சுக்க..
நீ பெத்தெடுக்கும் பிள்ளை வந்து உன்னைப்
பேசும் புரிஞ்சுக்க..
காதலுக்கு மட்டும் தான் நீ
கருச் சுமக்கனும் தெரிஞ்சுக்க..
காமத்துக்கு என்றும் நீ ஒரு
கருவியல்ல புரிஞ்சுக்க..
உள்ளம் என்பதை உள்ளங்கையின்
உள்ளடக்கத் தெரிஞ்சுக்க..
உணர்ச்சிப் பசிக்கு உண்ணும் உணவு
உபதை தரும் புரிஞ்சுக்க..
பட்டப் படிப்பு படிப்பது மட்டும்
பகுத்தறிவல்ல தெரிஞ்சுக்க..
படிக்காதவன் உன்னை விடப்
பாசக் காரன் புரிஞ்சுக்க..
கடிவாளமென்பது மனசுக்கு மட்டும்
மனசாட்சிக்கல்ல தெரிஞ்சுக்க..
தனம் பெற்றுத் தாரம் பெறுவது
தன்மானமில்லை புரிஞ்சுக்க...
கடற்கரையில் கட்டிலுடுவது
காதலல்ல தெரிஞ்சுக்க...
காத்திருந்த காதல் மட்டுமே
கரைச் சேரும் புரிஞ்சுக்க..
நிலவை மட்டும் ரசிந்திருந்தா ஒரு
நிம்மதியில்லை தெரிஞ்சுக்க..
நிலாச்சோறு ஊட்டியவளையும்
நெஞ்சுலவைக்கணும் புரிஞ்சுக்க..
நாகரீகம் என்பதென்ன??அதை முதலில் தெரிஞ்சுக்க..
நீ செய்யும் செயலுக்கெல்லாம் அதுப் பெயரல்ல
புரிஞ்சுக்க...

- ஆதிரா

No comments:

Post a Comment