Wednesday, October 8, 2014

முதன்மை மொழி

*40 நாடுகளில் முதன்மை மொழியாக இருக்கிறது ஆங்கிலம். முதன்மை மொழியாகவோ, இரண்டாம் மொழியாகவோ, ஒட்டுமொத்தமாக 150 கோடி மக்களால் பேசப்படுகிறது.

*உலகில் இப்போது 41,806 மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

*ஆங்கிலத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிக வார்த்தைகள் உள்ளன.

*கி.மு. 3200 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சுமேரிய அல்லது எகிப்திய மொழியே உலகின் முதல் எழுத்து மொழி.

*சுரினாம் என்ற தென் அமெரிக்க நாட்டில் பேசப்படும் ‘டகி டகி’ என்ற ‘ஸ்ரனன்’ மொழியில் 340 வார்த்தைகளே உள்ளன.

*P, T, K, M, N   ஆகிய எழுத்துகளே உலக மொழிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒலிகளாகும்.

*உலகின் பல மொழிகளிலும் ‘அம்மா’ என்பதற்கான வார்த்தை ‘ம்’ என்ற ஒலியிலேயே தொடங்குகிறது.

*கி.மு. 132 முதல் 63 வரை வாழ்ந்த பான்டுஸ் மன்னன் 6வது மிர்த்ரிடேட்ஸ், 25 மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

*70 லட்சம் மக்களே வாழக் கூடிய பாப்புவா நியூ கினியா நாட்டில் 850 பாரம்பரிய மொழிகள் உள்ளன.

*உலகில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஏதேனும் ஒருவிதத்தில் சீனம் சார்ந்த மொழியைப் பயன்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment