Monday, September 16, 2013

நாட்டுக்கோழி வளர்ப்பு முறை

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 500 கோழிகள் வளர்க்கலாம். கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற 




கோழிகளுக்குத்தான் நோய் வராது. கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்... பாம்புகள் நடமாட்டம் இருந்தால் பண்ணை முறை என்றால் பண்ணையை சுற்றி ஒரு அடி உயரம் மீன் வலைகளை கட்டலாம்.. பண்ணையை சுற்றி சிறியாநங்கை வளர்க்கலாம்.. மேலும் கோழி வளர்க்கும் இடத்தில் வான்கோழி மற்றும் கின்னிக்கோழி ஒன்று அல்லது இரண்டு வளர்க்கலாம்.. கோழி வகைகளில் வான்கோழியும், கின்னிக்கோழியும் மட்டும் சற்று வித்தியாசமானவை..பொதுவாக கின்னிக்கோழியை வளர்ப்பதற்கு தனித்திறமையே வேண்டும் என்பார்கள். ஏனெனில் கின்னிக்கோழிகளின் முழுநேர வேலையே இரையை அரைத்துக் கொண்டு இருப்பது தான் ஆனால் அதேநேரத்தில் கின்னிக்கோழிகள் வளர்க்கப்படும் இடத்தில் காட்டுப்பகுதியாக இருந்தாலும் மனிதர்கள் தைரியமாக நடமாட முடியும் மற்றும் வாழவும் முடியும். ஒருவகையில் சொல்லப் போனால் நாயின் செய்கைகளில் ஒருசில குணங்கள் கின்னிக்கோழிகளிடம் உண்டு .. இவற்றில் முக்கியமான ஒன்று கின்னிக்கோழிகள் வளரும் வீட்டிற்கு அருகில் விஷம் கொண்ட பாம்புகள் உள்பட விஷஜந்துகள் எதுவந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு எஜமானர்களுக்கு எச்சரிக்கை மணியாக கத்திக்கொண்டே இருக்கும். இதுமட்டுமின்றி வீட்டில் பழகிய நபர்களை தவிர வேறுயாராவது புதிய மனிதர்கள் வந்தாலும் கூட கின்னிக்கோழிகள் தங்களது கடமையை செய்ய தவறுவதில்லை...இது எழுப்பும் வித்தியாசமான சத்தத்தால் ஒருவிதமான அலைகள் உருவாகின்றன.. இதனால் அந்தபக்கம் பாம்புகள் வருவதில்லை..முயற்சி செய்து பார்க்கவும்...நன்றி.. வாழ்த்துக்கள்.....

1 comment:

  1. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

    ReplyDelete