Thursday, October 9, 2014

மரங்கள் செய்யும் சமூக சேவை..



ஒரு மரம் சமூகத்திற்கு செய்யும் சேவையின் மதிப்பு ரூ. 15.90 லட்சங்களாகும்.

1. பத்து குளிர்சாதனப் பெட்டிகள் (ஏ.சி.) இருபத்து நாலு மணி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்ப்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது

2. பதினெட்டுப் பேருக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன.

3. பிராணவாயு உற்பத்தியின் மதிப்பு - ரூ.3 இலட்சங்கள்

4. காற்றினைச் சுத்தமாக்குவதின் மதிப்பு ரூ. 5 இலட்சங்கள்
பூமியின் மேலே இருக்கும் மண்சத்து- குறையாமல் பாதுகாக்க -
ரூ.2 இலட்சங்கள்.

5. காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதின் மதிப்பு - ரூ 3 இலட்சங்கள்..

6. பறவைகளுக்கும்,விலங்குகளுக்கும் நிழல் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 2.50 இலட்சங்கள்.

7. உணவுச் சத்துக் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 20000
பூக்கள் மற்றவை வழங்குவதின் மதிப்பு ரூபாய் 20000

ஆக ஒரு மரத்தின் மொத்த மதிப்பு- ரூ.15.90.லட்சங்கள்..

இவ்வளவு பயன்களைத் தரும் மரங்களை ஏதேதோ காரணங்களுக்காக மனிதர்கள் வெட்டி சாய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்..

வெட்டிய மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகளை வளர்ப்பதினால் வருங்கால சந்ததியினர் பயனுறுவர்.. வாழும் காலங்களில் எதைச் செய்கின்றோமோ இல்லையோ அட்லீஸ்ட் ஒரு மரக்கன்றையாவது நட்டுவிட்டு செல்வோமே!

மரங்களை வளர்ப்போம்! வருங்கால சந்ததியினரைக் காப்போம்.

No comments:

Post a Comment