Monday, September 16, 2013

இலவசப் பயிற்சிகள்


நாட்டுக் கோழி வளர்ப்பு! 18.09.2013
சேலம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 18-ம் தேதி, நாட்டுக் கோழி வளர்ப்பும், சுவாச நோய் கட்டுப்பாட்டு முறைகளும் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை வளாகம், பிரட்ஸ் ரோடு, சேலம்-636001, தொலைபேசி: 0427-2410408

இலவசப் பயிற்சிகள்:
வண்ணமீன் வளர்ப்பு! 23.09.2013-25.09.2013
சென்னை, மாதவரம் பால்பண்ணையில் உள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் செப்டம்பர் 23-25-ம் தேதி வரையில் 'வண்ணமீன் மற்றும் உயிர் உணவு-நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. தங்கும் வசதி மற்றும் உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை-600051
தொலைபேசி: 044-25556750

இலவசப் பயிற்சிகள்:
இனப்பெருக்க மேலாண்மை! 25.09.2013
திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 25-ம் தேதி, கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களும், தீவன மேலாண்மையும், 26-ம் தேதி கால்நடைகளில் இனப்பெருக்க மேலாண்மைப் பயிற்சியும் நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்-624004
தொலைபேசி: 0451-2460141



வெள்ளாடு வளர்க்கப் பயிற்சி
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விஞ்ஞான முறையில் வெள்ளாடு பயிற்சி பெறலாம். இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ஜெ.
: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விஞ்ஞான முறையில் வெள்ளாடு பயிற்சி பெறலாம்.
இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ஜெ. கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் இலவச பயிற்சி செப். 7 காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மழைக் காலப் பராமரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, குறுகிய காலத்தில் அதிக உடல் எடை ஈட்டுதல், குட்டிகளில் இறப்பு விகிதத்தை குறைத்தல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர், முகவரியை நேரில், அல்லது வேளாண் அறிவியல் மையத்தை 04328- 293592 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment