பெயர் வாங்கித் தந்த, பெயரில்லா எலுமிச்சை... இயற்கை விவசாயியின் எளிய கண்டுபிடிப்பு !
இரண்டே ஆண்டுகளில் கொட்டிக் கொடுக்கும் நாட்டு ரகம் !
இந்த அதிசய ரகத்தை உருவாக்கிய புளியங்குடி அந்தோணிசாமியிடம் பேசினோம். ''நான் பார்த்தவரை எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போறதாகவும் இருந்துச்சு. 45 வருஷமா எலுமிச்சை சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தில கொத்துக்கொத்தா காய்க்குற நாட்டு எலுமிச்சையில 13 ரகங்களைத் தேர்ந்தெடுத்தேன். அதுல இருந்து ஒண்னை எடுத்துதான் இந்த புதிய ரகத்தை உருவாக்கினேன். இது இரண்டே வருஷத்துல காய்ப்புக்கு வந்துடுது.
இதை மதுரை சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் அகமதாபாத்துல இருக்கற 'தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்க’த்துக்கு அனுப்பி வெச்சாரு. அவுங்க இதைப் பல கட்டமா சோதிச்சுப் பாத்தப்ப, இந்த ரகத்துல எல்லா காய்களும் ஒரே சீரா இருந்ததைப் பாத்து பிரமிச்சுப் போயிட்டாங்களாம். அதிலும் பூ, பிஞ்சு, நடுத்தரக்காய், பெரிய காய், பழம்னு தொடர்ச்சியா இருந்ததால 2004-ம் வருஷம், தேசிய அளவுல எனக்கு 'சிருஷ்டி சல்மான்’ விருது கொடுத்தாங்க. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையால அந்த விருதை வாங்கினேன். இன்னிக்கு வரைக்கும் நான் பெயர் வைக்காத இந்த ரகம்தான், இன்னிக்கும் எனக்குப் பெயர் வாங்கி கொடுத்துட்டு இருக்கு.
ஏக்கருக்கு 100 மரங்கள்!
பாசனம்... கவனம்!
நடவு செய்து ஒரு வாரம் வரை, செடியின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்து விட வேண்டும். அளவுக்கு அதிகமாகவும் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. குறைவாகவும் தண்ணீர் பாய்ச்சக் கூடாது.
மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்து பக்குவமாகப் பாசனம் செய்ய வேண்டும். நடவு செய்த 40-ம் நாளில் தளிர் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் தாக்குதல் வரலாம். அவை, எலுமிச்சை இலைகளை உண்ணக்கூடும்.10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மில்லி வேப்ப எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து, தெளிப்பான் மூலமாகத் தெளித்தால் வண்ணத்துப்பூச்சி தாக்காது. தொடர்ந்து, 20 நாட்களுக்கு ஒருமுறை இப்படி பூச்சிவிரட்டி தயாரித்துத் தெளிக்க வேண்டும்.
அவ்வப்போது தேவைக்கேற்ப களை எடுத்து வர வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் மூட்டில் இருந்து ஒரு அடி தள்ளி, 20 கிலோ ஆட்டு எரு, ஒரு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. அடுத்தது அறுவடைதான்!
இரண்டாம் ஆண்டில் மகசூல்!
முழுசா இரண்டு வருஷம்கூட முடியல... இப்பவே பூ, பிஞ்சு, காய், பழம்...னு கலந்து கட்டி நிக்குது. எங்க பகுதியில வழக்கமா 5 வருஷம் ஆனாத்தான் எலுமிச்சை காய்க்கும். அதனால எல்லாரும் ஆச்சரியமா பாக்குறாங்க. சரியா 600 நாள்ல அறுவடைக்கு வந்துடுச்சு.
ஒரு செடியில வருஷத்துக்கு சராசரியா 200 காய் முதல் 300 காய் வரை கிடைக்கும்.

No comments:
Post a Comment