Monday, September 16, 2013

ஊறுகாய் புல் தயாரிக்க

இந்த மழை காலத்தில் புற்கள் நிறைய கிடைக்கும் , ஆனால் வெயில் காலங்களில் ஒன்றும் இருக்காது , எனவே நண்பர்கள் காற்றுள்ள போதே துற்றிகொள்ள வேண்டும் .
தடித்த தண்டுடைய புல்லை உலர்புல்(hay ) தயாரிக்கவும் , மற்ற புலையும் பசுந்தீவனன்களையும் சைலேஜ் ( ஊறுகாய் புல்) தயாரிக்க உபயோகப்படுத்தி கொள்ளலாம் .
அவற்றை மூன்று மாதம் கழித்து பயன் படுத்தி கொள்ளலாம் .
இவற்றை பல முறைகளில் தயாரிக்கலாம் , இந்த லிங்குகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் ,
1)http://greenindiafoundation.blogspot.in/2011/07/blog-post_30.html
3)http://www.youtube.com/watch?v=BEe3xlVd9V4
இதில் பல முறைகள் கையாளப்படுகின்றன .
நான் அறிவுறுத்துவது
குழி வெட்டியும் செய்யலாம் , பாலிதீன் பைகள் கொண்டும் செய்யலாம் 



1) காற்று புகாவண்ணம் டைட்டாக இருக்க வேண்டும் , பெரிய பாலிதீன் பைகள் உகந்தவை .
2) பேக் பண்ணும்போது ஒவ்வொரு லேயரும் டைட்டாக இருக்க நல்ல அழுத்தம் கொடுக்கபட்டிருக்க வேண்டும்
3)ஒவ்வோர் புல் அடுக்குக்கும் இடையில் உப்பு 0.5 % , யூரியா 1% சேர்த்தல் நல்ல புரதம் மாட்டுக்கு கிடைக்கும் , மாடும் விரும்பி உண்ணும்
4) தீவனப்புல் 50 சதவீதம் பூத்த நிலையில் இருக்கும் பொது செய்தால் நிறைய சத்துக்கள் கிடைக்கும்
5)நல்ல சைலேக் மஞ்சள் அல்லது பழுப்பேறிய பச்சை நிறத்தில் இருக்கும் . சில சமயம் கருப்பாகவும் இருக்கும் .
6)பூஞ்சை பாதித்திருந்தால் கொடுக்க கூடாது
7)கால்நடைகள் முதலில் விரும்பி உண்ணாது , சிறிது உலர்த்தி அளிக்க உன்ன ஆரம்பிக்கும்
8)பால் பசுக்களுக்கு 15 கிலோ வரையும் ஆடுகளுக்கு 3 கிலோ வரையும் நாளொன்றுக்கு தரலாம்

No comments:

Post a Comment