Monday, September 16, 2013

இயற்க்கை விவசாயத்தில் ஆடுகளின் பங்களிப்பை பற்றி பார்க்கலாம்..

மனிதர்களால் வளர்க்கப்படும் எல்லா பிராணிகளுமே எதாவது ஒரு விதத்தில் மனிதனுக்கு பல வித நன்மைகளை செய்கின்றன. அதில் முழுவதுமாக தன்னையே அர்ப்பணித்து தரும் ஜீவன்களில் முதலில் பசுவும், இரண்டாவது நமது ஆடும் ஆகும்...
பசுவின் மூலம் நாம் பெரும் நன்மைகளில் குறிப்பிட்ட அளவு ஆடுகளிலும் பெறலாம்.. இதற்க்கு சான்று அடிக்கு ஆட்டு எரு, மேலுக்கு மாட்டு எரு என்றும், அந்த மாதர்திற்கு ஆட்டு எரு அடுத்த மாதர்திற்கு மாட்டு எரு என்று நம் முன்னோர்கள் இயற்க்கை விவசாயத்தில் ஆடுகளையும் பயன்படுத்தி நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்துள்ளனர்...
இதற்கு என்ன விளக்கம் என்றால் ஒரு பயிர் செய்யும் போது அடி உரமாக ஆட்டின் எருவையும் மேலுரமாக மாட்டின் எருவையும் பயன்படுத்தி விவசாயம் செய்துள்ளனர்.. . மேலும் மரங்கள் நடும் போதும் அடி உரமாக ஆட்டு எருவயெ பயன்படுத்தி உள்ளனர். அதனால் தான் அந்த மாதம்(கன்று நடும் போது ) ஆட்டுஎரு அடுத்த மாதம்(அதாவது மறு உரம் வைக்கும் மாதம்) மாட்டு எரு என்று பழமொழியாக சொல்லி வைத்துள்ளனர்...
இந்த ஆட்டு எருவில் அப்படி என்ன மகத்துவம் என்றால் ஆடுகள் அடர்திவனம் மற்றும் வைக்கோலை விட இலை,தழை களைத்தான் அதிகமாக உண்கின்றன.. இவற்றின் சத்துக்கள் அதன் கழிவுகளிலும் அதிகமாக உள்ளது.. சரி இவற்றின் சாணம் மற்றும் முத்திரத்தை எப்படி சேகரித்து பயன்படுத்தி இருப்பார்கள்.
அதற்க்கு அவர்கள் கையாண்ட முறை தான் விவசாய நிலத்தில் "கிடை போடுதல்" சில பகுதிகளில் பட்டி போடுதல் என்பார்கள்..
நிலத்தை நன்றாக உழுது முடித்து ஒரு ஏக்கருக்கு சுமார் நூறு ஆடுகளை வைத்து கிடை போட்டால் போதும் நமது பயிருக்கு தேவையான அனைத்து அடி சத்துக்களும் கிடைத்து விடுகின்றன. இதற்க்கு 100 ரூபாய் மட்டுமே செலவு.. அந்த காலத்தில் நெல் கொஞ்சம் குடுப்பார்கள் அவ்வளவே... ஆனால் கிடைக்கும் இயற்க்கை சத்துக்களின் அளவோ மிக மிக அதிகம்..
இதனால் பயிர்களுக்கு தேவையான தழைசத்து ஆடுகளின் மூலம் எளிதாக கிடைத்து விடுகிறது. மேலும் மரங்கள்(தென்னை உட்பட) பயிர் செய்த அனைத்து நிலங்களிலும் 20 ஆடுகள் இருந்தால் களை எடுத்தல் உரம் வைத்தல் போன்ற வேலைகளை அவைகளே பார்த்துக்கொள்ளும்..
மேலும் ஆடுகளின் சாணத்தில் ஆடுட்டம், ஆட்டு பஞ்சகவ்யம், போன்ற பொருட்களும், பயிர்களுக்கு தேவையான உர டி போன்றவற்றை நாமே தயார் செய்து மகசூலில் அதிக பலன் காணலாம்.. 

நண்பர்களுக்கு வணக்கம் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நண்பர்களே அடியேனின் இந்த பதிவில் இயற்க்கை விவசாயத்தில் ஆடுகளின் பங்களிப்பை பற்றி பார்க்கலாம்..

மேலும் நமது முன்னோர்கள் கெட்டவனுக்கு எட்டாடு என்ற பழமொழியும் சொல்லிவைத்துள்ளனர்.. அதாவது வாழ்கையில் நன்றாக வாழ்ந்து பின்னர் பொருளாதாரரீதியாக கஷ்ட படுபவர்களுக்கு அந்த நாட்டை ஆட்சி செய்யும் மன்னர் எட்டு ஆடுகளை கொடுத்து பராமரித்து ஆடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு மட்டும் கோவில்க்கு வரி செலுத்த சொல்வார்கள்(அது ஆடாகவோ, பணமாகவோ அளிக்கலாம்).. அவர்கள் அந்த ஆடுகளை வைத்தே இழந்த  செல்வத்தை திரும்ப பெற்று விடுவார்கள்...
மேலும் ஆட்டு பால் பல நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக  பயன்படுகின்றது... இன்னும் எத்தனையோ பயன்கள் ஆடுகளில் உள்ளன.. அவற்றை அடியேன் இடை இடையே பதிவு செய்கிறேன்..
குறிப்பு : விவசாய நிலத்தில் ஆட்டு கிடை போடுபவர்கள் இரவின் நடுவே ஆட்டை ஒருமுறை எழுப்பினால் அதிக சிறுநீர் மற்றும் சாணம் கிடைக்கும்.. அடுத்த பதிவில் சந்திப்போம்... நன்றி......
மேலும் நமது முன்னோர்கள் கெட்டவனுக்கு எட்டாடு என்ற பழமொழியும் சொல்லிவைத்துள்ளனர்.. அதாவது வாழ்கையில் நன்றாக வாழ்ந்து பின்னர் பொருளாதாரரீதியாக கஷ்ட படுபவர்களுக்கு அந்த நாட்டை ஆட்சி செய்யும் மன்னர் எட்டு ஆடுகளை கொடுத்து பராமரித்து ஆடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு மட்டும் கோவில்க்கு வரி செலுத்த சொல்வார்கள்(அது ஆடாகவோ, பணமாகவோ அளிக்கலாம்).. அவர்கள் அந்த ஆடுகளை வைத்தே இழந்த செல்வத்தை திரும்ப பெற்று விடுவார்கள்...
மேலும் ஆட்டு பால் பல நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகின்றது... இன்னும் எத்தனையோ பயன்கள் ஆடுகளில் உள்ளன.. அவற்றை அடியேன் இடை இடையே பதிவு செய்கிறேன்..
குறிப்பு : விவசாய நிலத்தில் ஆட்டு கிடை போடுபவர்கள் இரவின் நடுவே ஆட்டை ஒருமுறை எழுப்பினால் அதிக சிறுநீர் மற்றும் சாணம் கிடைக்கும்.. அடுத்த பதிவில் சந்திப்போம்... நன்றி...

No comments:

Post a Comment