Thursday, September 12, 2013

ஏற்றுமதி துறை How to get a Bank Loan for Export:


----> www.fb.com/ommuruga <----
sir,i am planning to start export business, i approached icici & axis bank for current account and need export loan purpose, but they inform me after 6 months only loan available, so which bank i will contact also government of India can support for export loan?pls reply. i am from Tamil Nad.
Om Muruga my bro you need to understand with proper documents if you approach bank they give you loan. In your case if am a banker i will ask the documents for your check list:
1). Your companies registration Copy.
2). Your personal worth as land, property, fixed deposit anything.
3). Importers order for your company.
4). If importer giving your Letter of Credit that copy.
5). How you going to utilise the loan a proposal letter and how fast you can settle the amount with the bank?
If you dont have all these need loan then call me...9943826447 for private financing.
----> www.fb.com/ommuruga <----



வர்த்தக அமைச்சகம் விருப்பம் ஏற்றுமதி துறைக்கும் முன்னுரிமை கடன்
முன்னுரிமை கடன் பெற தகுதி வாய்ந்த துறைகளில் ஏற்றுமதிப் பிரிவுகளையும் இணைக்க மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் விரும்புகிறது. இதன் மூலம் குறைந்த வட்டியிலும், நீண்ட கால அடிப்படையிலும் ஏற்றுமதியாளர்கள் கடன் பெற முடியும் என்பதால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்குனர் அனுப் பூஜாரி தெரிவித்தார். இது தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார்.
2007–08 முதல் 2012–13 வரையிலான காலத்தில் நாட்டில் வழங்கப்பட்ட மொத்த கடனில் ஏற்றுமதி துறையினருக்கான கடன் 19.82 சதவீதத்திலிருந்து 11.36 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் 8 சதவீதம் குறைந்துள்ளது. இதிலிருந்தே அவர்களுக்கு நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
தற்சமயம் வெளிநாட்டு வங்கிகள் மட்டும்தான் மொத்த கடனில் 12 சதவீதத்தைஏற்றுமதியாளர்களுக்கு முன்னுரிமை கடனாக வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பிற வங்கிகளுக்கு ஏற்றுமதி கடன் என்பது 40 சதவீத முன்னுரிமை கடனுக்கு வெளியில்தான் உள்ளது. வர்த்தக மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் ஏற்றுமதியாளர்களுக்கு எளிய கடன் வசதிகள் வேண்டும் என்ற கருத்து இப்போது வலுப்பெற்று வருகிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை, சென்ற நிதி ஆண்டில், நாட்டின் மொத்த உற்பத்தியில் 4.8 சதவீதமாக (8,820 கோடி டாலர்) இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இதனை 3.7 சதவீதமாக (7,000 கோடி டாலர்) குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஏற்றுமதிக்கான ஆவணங்கள் (Export Documents)

Export Order

ஏற்றுமதி ஆணை என்பது ஏற்றுமதியாளருக்கும், இறக்குமதியாளருக்கும் முதல் முக்கிய வர்த்தக ஆவணமாகும். இந்த ஆவணம் ஏற்றுமதியாளருக்கும், இறக்குமதியாளருக்கும் மட்டும் முக்கியாமனவை அல்ல இரு நாட்டிற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இது இருநாட்டின் அந்நிய செலவாணியில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஏற்றுமதியாளர் இந்த ஆவணத்தை பல்வேறு வர்த்தக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவை,

பல்வேறு அரசு அலுவலகம்.
நிதித் துறை.
கட்டுப்படுத்தப்பட்ட பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் அதற்கான உரிமத்தை பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.
முன் பணம் பெறும் போது.
சுங்கத்துறையிடம்.
பொருட்களை பரிசோதிக்கும் பொழுது.
காப்பீட்டு அலுவலகம்.
இன்னும் பல அலுவலகத்தில் இந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.

Order Acceptance

ஏற்றுமதிக்கான ஆணையை பெற்றவுடன் ஏற்றுமதியாளர் ஏற்றுமதிக்கான ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் ஏற்றுமதியாளரால் தயாரிக்கப்படும் ஒரு முக்கிய ஆவணம் இதுவாகும். இதில் அவசியம் ஏற்பட்டால் இறக்குமதியாளரின் கையொப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆவணத்தில் இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருட்களை பெறும் நபரின் பெயர் மற்றும் முகவரி, ஏற்றுமதி செய்யப்படும் இடம், பொருள் இறுதியாக சென்றடையும் இடத்தின் முகவரி, பொருளை பற்றி விவரம், பொருட்களின் விலை மற்றும் எடை, பேக்கிங் மற்றும் குறிப்பு சீட்டின் முறை, பணப்பட்டுவாடா முறை மற்றும் பொருட்களுக்கான காப்பீடு ஆகிய விவரங்கள் உள்ளடங்கி இருக்கும்.

Letter of Credit

Letter of Credit என்பது ஏற்றுமதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை பெற்றுக்கொள்ள, இறக்குமதியாளரின் வங்கி, பணத்திற்கான உறுதியை அளிக்கும் ஒரு ஆவணமாகும். இதனைப்பற்றிய விரிவான விவரங்களை நாம் ஏற்கனவே படித்துள்ளோம்.

Mate\'s Receipt

Mate\'s Receipt என்பது பொருட்களை கப்பலில் ஏற்றப்பட்ட பின் கப்பலின் தலைமை மாலுமியால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். கப்பலின் பெயர், ஏற்றப்பட்ட இடம், பொருள் சென்றடையும் இடம், பொருளின் முழு விவரம், எடை மற்றும் மதிப்பு, பொருள் ஏற்றப்பட்ட கண்டெய்னரின் விவரம் இந்த Mate\'s Receipt - ல் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த Mate\'s Receipt - ஐ பெற்றவுடன் கப்பலின் அலுவலகம் அல்லது முகவரிடம் கொடுத்து Bill of Lading - ஐ பெற்றுக் கொள்ள வேண்டும்.

Bill of Lading

Bill of Lading என்பது பொருட்களை கடல் வழியாக கொண்டு செல்லும் போது கப்பலின் அலுவலகம் வழங்கும் ஒரு ஆவணமாகும். பொருட்களை கப்பலில் ஏற்பட்டதிற்கு ஆதாரமாக கப்பலின் தலைமை மாலுமியால் வழங்கப்பட்ட Mate\'s Receipt - ஐ பெற்றுக்கொண்டு Bill of Lading - ஐ கப்பலின் அலுவலகம் வழங்கும்.

Post Parcel Receipt

Post Parcel Receipt என்பது அஞ்சல் வழியாக பொருட்களை அனுப்ப அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் ஆவணமாகும். அவ்வாறு அனுப்பப்படும் பொருளை நேரடியாக இறக்குமதியாளரின் முகவரிக்கு அனுப்பினால் இறக்குமதியாளர் பொருட்களை பெற்றுக்கொண்டு பணத்தை செலுத்த தவறலாம். அதனால் பொருட்களை அனுப்பும் பொழுது இறக்குமதியாளரின் வங்கி முகவரிக்கு அனுப்புவது சிறந்ததாகும்.

Insurance Policy / Certificate

பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது ஏற்படும் பலவகையான ஆபத்தால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க பொருட்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேருவதின் மூலம், காப்பீட்டு கழகத்தால் வழங்கும் ஆவணமாகும்.

Certificate of Origin

Certificate of Origin என்பது பொருட்கள் இந்நாட்டில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று Champers of Commerce - ஆல் வழங்கப்படும் ஒரு சான்றிதழ் ஆகும். இந்த சான்றிதழை வழங்க பல வகையான அலுவலகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Manufacturer Certificate

சில குறிப்பிட்ட நாடுகளுக்கு தயாரிப்பு சான்றிதழ் ( Manufacturer Certificate ) தேவைப்படுகிறது. அதாவது பொருட்கள் முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டதா ? என்பதை விளக்கும் சான்றிதழ் ஆகும்.

GSP Certificate ( Generalized System of Preferences )

இந்தியா போன்ற வளரும் நாடுகளால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு EEC நாடுகளால் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரிச்சலுகையை பெற GCP Certificate மிக முக்கியமாகும்.

Certificate of Inspection

தரக்கட்டுப்பாட்டால் பொருட்களை ஏற்றுமதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் பரிசோதித்து வழங்கப்படும் ஒரு ஆவணமாகும்.

Anriquity Certificate

பழமையான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தால் வழங்கப்படும் ஒரு சான்றிதழ் Anriquity Certificate ஆகும்.

Packing List / Note

Packing List / Note என்பது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, இன்வாய்ஸ் எண், ஆர்டர் எண், கப்பலின் விவரம், பில் ஆப் லேடிங் ( Bill of Lading ) எண், பொருட்களின் விவரம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணமாகும்.

Certificate of Measurement

பொதுவாக பொருட்களை வாகனத்தில் ஏற்றிச் செல்ல ஏற்றுமதியாளர் தெரிவிக்கும் பொருட்களின் மொத்த எடை அல்லது அளவுகளின் அடிப்படையில் தான் வாடகை வசூலிக்கப்படும். இருப்பினும் Champer of Commerce - ல் அல்லது அனுமதி பெற்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழில் கப்பலின் பெயர், சரக்கு சென்றடையும் இடத்தின் விவரம், சரக்கின் மொத்த எடை, நீளம், அகலம் மற்றும் ஆழம் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.

Shipping Order

Shipping Order என்பது பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்வதற்கு முன்பதிவு அவசியமாக செய்யும் பொருட்டு கப்பலின் அலுவலகம் வழங்கும் ஆவணமாகும்.

Commercial Invoice

Commercial Invoice என்பது ஏற்றுமதியாளரால் தயார் செய்து வழங்கப்படும் ஆவணமாகும். இதில் பொருட்களின் விவரம், ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருளை பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி, கப்பலின் பெயர் மற்றும் முகவரி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி, ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் பெயர், பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பு சீட்டு விவரம், பொருட்களின் மொத்த விலை வாடகை மற்றும் காப்பீட்டின் விவரம் அடங்கியிருக்கும்.

Custom Invoice

USA , கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு Custom Invoice தேவைப்படுகிறது. இது ஏற்றுமதியாளரால் வழங்கும் சான்றிதழ் ஆகும்.

Legalised Invoice

சில நாடுகளுக்கு Legalised Invoice தேவைப்படுகிறது. இதற்கென்று தனி படிவம் கிடையாது. Commercial Invoice - ஐ பொருட்களை அனுப்பப்படும் நாட்டின் Embassy யிடம் காண்பித்து அதில் கையொப்பம் பெற வேண்டும்.

Shipping Advice

Shipping Advice என்பது பொருட்களை கப்பலில் ஏற்றப்பட்டு விட்டதை இறக்குமதியாளருக்கு தெரிவிக்க பயன்படுத்தும் ஆவணம் ஆகும் , இதில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளின் மொத்த எண்ணிக்கை,ஏற்றப்பட்ட இடம் மற்றும் தேதி, கப்பலின் பெயர், கப்பல் பயணிக்கும் நாட்களின் விவரம் Invoice எண் மற்றும் தேதி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.

Shipping Bill

Shipping Bill என்பது ஏற்றுமதியாளர் சுங்கத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஒரு மிக மிக முக்கியமான ஆவணமாகும். இதில் பொருட்களின் விவரம், ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருளை பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி, கப்பலின் பெயர் மற்றும் முகவரி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி, ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் பெயர், பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பு சீட்டு விவரம், பொருட்களின் மொத்த FOB விலை, பணப்பட்டுவாடா முறை, வாடகை மற்றும் காப்பீட்டின் விவரம் அடங்கி இருக்கும்.

Freight Declaration

இறக்குமதியாளர் கப்பலின் வாடகையை செலுத்தி விடுவதாக உறுதியளிக்கும் ஆவணம் இதுவாகும். ஏற்றுமதியாளர் வாடகையை செலுத்தி விடுவதாக இருந்தாலும் கூட இந்த ஆவணத்தின் மூலம் தான் தெரிவிக்க வேண்டும்.

Health Certificate

உணவு வகைகள், விதைகள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி செய்ய Health Department - ல் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

Certificate of Value

பொதுவாக பொருளின் Commercial Invoice - ல் குறிப்பிடப்பட்டிருக்கும் இருப்பினும் சில நாடுகளுக்கு தனியாக Certificate of Value தேவைப்படுகிறது.
நண்பர்களே!!! உங்கள் சந்தேகங்களை மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக வலைதளத்தின் முகவரியுடன் பதிவு செய்யுங்கள் ....

1 comment:

  1. News date old but information is gold gold thank you sir

    ReplyDelete