Thursday, August 7, 2014

Agriculture secrets!

மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.

தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.

சீமைக் கருவேல், வேலிக்காத்தான், ஆபீஸ் முள்னு பல பேர்ல சொல்லப்படற முள்ளுச்செடி நம்ம ஊர்ல எங்க பாத்தாலும் வளந்து கிடக்கும். இதோட காய்ங்க கால்நடைக்கு அருமையான தீவனம். முதிர்ந்த காய்ங்க பளபளனு மஞ்சள் நிறத்துல இருக்கும். அதை சேகரிச்சி தினமும் அரை கிலோ வீதம் பால் மாட்டுக்கு கொடுத்து வந்தா, அதிகமா பால் கிடைக்கும். மாடும் நல்ல கொழுகொழுனு இருக்கும்.

வெண்டைச் செடிக்கு சத்துப் பற்றாக்குறை வந்துச்சுன்னா, வெள்ளை வெளேர்ன்னு வெளுத்துடும். இதை சரி செய்யவும் சீமைக் கருவேல்தான் உதவி செய்யுதுங்க. அரை லிட்டர் சீமைக் கருவேல் இலைச்சாறை பத்து லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சா வெண்டைச் செடி பசுமையா மாறிடும். காயும் சும்மா பச்சை பசேல்னு இருக்கும்.

மிளகாச் செடிய அடிக்கடி சாம்பல் நோய் தாக்கும். இதைத் தடுக்கவும் சீமைக் கருவேல் கைக் கொடுக்குதுங்க. பத்து லிட்டர் தண்ணியில அரைலிட்டர் சீமைக் கருவேல் சாறைக் கலந்து தெளிக்கலாம். இப்படி செஞ்சா இலைப் புள்ளி நோயும் வராது. மிளகாச் செடியும் பச்சை, பசேல்னு இருக்கும்.

நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.

No comments:

Post a Comment