Sunday, August 10, 2014

தார் சாலை பணி ஒப்பந்ததாரர்களுக்கு கிடுக்கிப்பிடி

அதாகப்பட்டது மக்களே, இனிமே, contractor கரீட்டா, மினிஸ்டர் சொன்ன மாதிரி உங்கள் ஊர்ல தரமா தார் சாலை போடலேன்னா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, .......ங்கொய்யால, மாத்தி, கீத்தி, போட்டுருந்தான்னு வை, அவன, கலீஜ் பண்ணிடு........                                                 வரவேற்க வேண்டிய திட்டம் - முறைகேடின்றி செயல்படுமாயின் அரசுக்கு எனது வாழ்த்துக்கள் 

கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று, தார் சாலை பணிகளை மட்டும் போட்டி போட்டு எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு கிடுக்கிப்பிடி 

சேதமடையும் போதோ அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையிலோ புதிதாக அமைக்கப்படுகின்றன. இதற்காக மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும், பல கோடி ரூபாய் செலவழிக்கிறது.
ஆனால், தார் சாலை பணிகள் தரமாக நடப்பதில்லை. இதில், பல்வேறு முறைகேடுகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். அதனால், தார் சாலை பணிகளை எடுக்க மட்டும் போட்டா போட்டி நிலவுகிறது. இதற்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், தார் சாலை பணிகளை மதிப்பிட முதல்முறையாக, பொறியாளர்களுக்கு சிறப்பு கையேட்டினை மாநகராட்சி அளிக்க உள்ளது.

கையேட்டின் முக்கிய அம்சங்கள்

* ஒப்பந்ததாரர்களின் தார் கலவை நிலையத்தில், மாநகராட்சி, இரண்டு தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்கும்.

* அங்கு தார் அளவு, வெப்பம், கற்களின் அளவுகள், இதர விகிதங்களை பரிசோதனை செய்து, சரியாக இருந்தால் மட்டுமே, லாரி வெளியே செல்ல அனுமதித்து, அவர்கள் ஒப்புகை சீட்டில் கையெழுத்திடுவர்.

* இந்த பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும். இதன் மூலம், அந்த பணிக்கு உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் மூலம், தார் கலவை செல்லும் லாரி எண், ஒப்பந்ததாரர் பெயர், தார் கலவை அளவு, பரிசோதனையின் போது கலவையின் வெப்பம், லாரி புறப்படும் நேரம், எந்த இடத்திற்கு செல்கிறது, பகுதி பொறுப்பாளர் ஆகிய விவரங்களை பதிவு செய்வார்.

* இந்த விவரங்கள் தலைமையிடத்து தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள், மண்டல, வார்டு பொறியாளர்களுக்கு, அவர்களின், 'ஸ்மார்ட் போனில்' குறுஞ்செய்தியாக வந்து சேரும்.

* வார்டு பொறியாளர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் சாலை பணிகளின் போது, தார் கலவையை இருமுறை பரிசோதனை செய்து, அதை 'ஸ்மார்ட் போனில்' பதிவு செய்ய வேண்டும். அதுவும் குறுஞ்செய்தியாக தரக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு வந்து சேரும். இதன் மூலம் சாலை அமைக்கும் போதே, குறைபாடுகளை களைய முடியும்.

* மூன்று நடமாடும் தரக்கட்டுப்பாடு வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, வட்டாரத்திற்கு ஒன்று வழங்கப்படும். இந்த வாகனங்கள் பணி நடக்கும் இடத்திற்கு சென்று, அதில் உள்ள உதவி பொறியாளர் பணிகளை ஆய்வு செய்து, தனது 'ஸ்மார்ட் போனில்' பதிவு செய்வார்.

* முடிக்கப்பட்ட பணிகளை ஆய்வு செய்ய, தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள், ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் நேரில் சென்று சோதனை செய்வர்.

* ஒவ்வொரு மண்டலமும், தங்கள் பகுதியில் நடந்த பணி விவரங்களை, ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை பிற்பகல் 3:௦௦ மணிக்குள் தலைமையிட தரக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் அனுப்ப வேண்டும். இதன்படி கள ஆய்வு நடக்கும்.

* பணிகள் தரமாக இருப்பதாக சான்று அளிக்கப்பட்ட பிறகே, பணிக்கான தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும்.

* இந்த விஷயத்தில் ஒரு ஒப்பந்ததாரர் சில தவறுகளை அடிக்கடி செய்து வந்தால், அவருக்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்படும். ஒரு ஒப்பந்ததாரர், 500 தண்டனை புள்ளிகள் பெற்றால், அவர் கருப்பு பட்டியலில்
சேர்க்கப்படுவார்.

* இந்த நிபந்தனைகள் ஒப்பந்த புத்தகத்தில் வெளியிடப்படும். தார் சாலை மட்டுமின்றி, கான்கிரீட் சாலை, கட்டடங்கள், பாலங்கள், மழைநீர் வடிகால் ஆகிய பணிகளுக்கு தர பரிசோதனை மேற்கொள்ள, அனைத்து கருவிகளுடன் கூடிய தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை நிலையத்தை
உருவாக்கி, அதை தரக்கட்டுப்பாடு பொறியாளரின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தார் சாலை பணிகளை மதிப்பிடும் இந்த புதிய நடைமுறை, உடனடியாக அமலுக்கு வரும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். நன்றி : தஞ்சை தேவா
சட்டம் என்ன சொல்கிறது

அதாகப்பட்டது மக்களே, இனிமே, contractor கரீட்டா, மினிஸ்டர் சொன்ன மாதிரி உங்கள் ஊர்ல தரமா தார் சாலை போடலேன்னா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, .......ங்கொய்யால, மாத்தி, கீத்தி, போட்டுருந்தான்னு வை, அவன, கலீஜ் பண்ணிடு........ 

வரவேற்க வேண்டிய திட்டம் - முறைகேடின்றி செயல்படுமாயின் அரசுக்கு எனது வாழ்த்துக்கள்

கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று, தார் சாலை பணிகளை மட்டும் போட்டி போட்டு எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு கிடுக்கிப்பிடி
சேதமடையும் போதோ அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையிலோ புதிதாக அமைக்கப்படுகின்றன. இதற்காக மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும், பல கோடி ரூபாய் செலவழிக்கிறது.
ஆனால், தார் சாலை பணிகள் தரமாக நடப்பதில்லை. இதில், பல்வேறு முறைகேடுகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். அதனால், தார் சாலை பணிகளை எடுக்க மட்டும் போட்டா போட்டி நிலவுகிறது. இதற்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், தார் சாலை பணிகளை மதிப்பிட முதல்முறையாக, பொறியாளர்களுக்கு சிறப்பு கையேட்டினை மாநகராட்சி அளிக்க உள்ளது.

கையேட்டின் முக்கிய அம்சங்கள்

* ஒப்பந்ததாரர்களின் தார் கலவை நிலையத்தில், மாநகராட்சி, இரண்டு தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்கும்.

* அங்கு தார் அளவு, வெப்பம், கற்களின் அளவுகள், இதர விகிதங்களை பரிசோதனை செய்து, சரியாக இருந்தால் மட்டுமே, லாரி வெளியே செல்ல அனுமதித்து, அவர்கள் ஒப்புகை சீட்டில் கையெழுத்திடுவர்.

* இந்த பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும். இதன் மூலம், அந்த பணிக்கு உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் மூலம், தார் கலவை செல்லும் லாரி எண், ஒப்பந்ததாரர் பெயர், தார் கலவை அளவு, பரிசோதனையின் போது கலவையின் வெப்பம், லாரி புறப்படும் நேரம், எந்த இடத்திற்கு செல்கிறது, பகுதி பொறுப்பாளர் ஆகிய விவரங்களை பதிவு செய்வார்.

* இந்த விவரங்கள் தலைமையிடத்து தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள், மண்டல, வார்டு பொறியாளர்களுக்கு, அவர்களின், 'ஸ்மார்ட் போனில்' குறுஞ்செய்தியாக வந்து சேரும்.

* வார்டு பொறியாளர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் சாலை பணிகளின் போது, தார் கலவையை இருமுறை பரிசோதனை செய்து, அதை 'ஸ்மார்ட் போனில்' பதிவு செய்ய வேண்டும். அதுவும் குறுஞ்செய்தியாக தரக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு வந்து சேரும். இதன் மூலம் சாலை அமைக்கும் போதே, குறைபாடுகளை களைய முடியும்.

* மூன்று நடமாடும் தரக்கட்டுப்பாடு வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, வட்டாரத்திற்கு ஒன்று வழங்கப்படும். இந்த வாகனங்கள் பணி நடக்கும் இடத்திற்கு சென்று, அதில் உள்ள உதவி பொறியாளர் பணிகளை ஆய்வு செய்து, தனது 'ஸ்மார்ட் போனில்' பதிவு செய்வார்.

* முடிக்கப்பட்ட பணிகளை ஆய்வு செய்ய, தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள், ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் நேரில் சென்று சோதனை செய்வர்.

* ஒவ்வொரு மண்டலமும், தங்கள் பகுதியில் நடந்த பணி விவரங்களை, ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை பிற்பகல் 3:௦௦ மணிக்குள் தலைமையிட தரக்கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் அனுப்ப வேண்டும். இதன்படி கள ஆய்வு நடக்கும்.

* பணிகள் தரமாக இருப்பதாக சான்று அளிக்கப்பட்ட பிறகே, பணிக்கான தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும்.

* இந்த விஷயத்தில் ஒரு ஒப்பந்ததாரர் சில தவறுகளை அடிக்கடி செய்து வந்தால், அவருக்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்படும். ஒரு ஒப்பந்ததாரர், 500 தண்டனை புள்ளிகள் பெற்றால், அவர் கருப்பு பட்டியலில்
சேர்க்கப்படுவார்.

* இந்த நிபந்தனைகள் ஒப்பந்த புத்தகத்தில் வெளியிடப்படும். தார் சாலை மட்டுமின்றி, கான்கிரீட் சாலை, கட்டடங்கள், பாலங்கள், மழைநீர் வடிகால் ஆகிய பணிகளுக்கு தர பரிசோதனை மேற்கொள்ள, அனைத்து கருவிகளுடன் கூடிய தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை நிலையத்தை
உருவாக்கி, அதை தரக்கட்டுப்பாடு பொறியாளரின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தார் சாலை பணிகளை மதிப்பிடும் இந்த புதிய நடைமுறை, உடனடியாக அமலுக்கு வரும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

நன்றி : தஞ்சை தேவா

No comments:

Post a Comment