Sunday, August 10, 2014

மோசடி பத்திரம் பதிந்தால்

பத்திர அலுவலகத்தில், மோசடி பத்திரம் பதிந்தால் சார்பதிவாளர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? ----------------------------------------------------------------------------------------------

பத்திர அலுவலகத்தில், மோசடி பத்திரம் பதிந்தால் சார்பதிவாளர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?                ----------------------------------------------------------------------------------------------வழக்கமாக தவறான பத்திரம் பதிந்தால், பாதிக்கப்பட்டவரை சிவில் நீதிமன்றம் போக, சார்பதிவாளர் உத்தரவிடுவார். ஆனால், இது பாதிக்கப்பட்டவருக்கு, இரு சுமைகளை ஏற்படுத்துகிறது. 
இதை களைய, பதிவு சட்டம் 83 இன் படி, சார்பதிவாளர் நேரடியாக, மோசடி செய்தவர்கள் மீது, குற்ற புகார் கொடுக்கலாம். இப்படி புகார் கொடுத்தல், சார்பதிவாலரின் முக்கிய கடமை ஆகும். ஆனால், இது குறித்து சார்பதிவாளரருக்கு வரும் எவ்வித புகாரரையும் அவர் ஏற்று விசாரிப்பதில்லை, அதனால், இந்த புகார் மீது சார்பதிவாளர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.       

ஆனால், பதிவு சட்டம் 82,83 சேர்க்கபட்டதே பதிவு துறையில், தவறான ஆவணங்கள் காட்டியும்,பொய் வாக்குமூலங்கள் கொடுத்தும், ஏமாற்றுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கமாகும். yanala malleswari Vs Ananthalu sayamma என்ற வழக்கில் ஆந்திரா உயர் நீதிமன்றம் , சார் பதிவாளர், மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஒரு பத்திரத்தால், உண்மையான உரிமையாளர்கள் உரிமை பாதிக்கப்படுமானால், அந்த பத்திரத்தை, சார்பதிவாளர் தானாகவே ரத்து செய்ய அவருக்கு உரிமை உண்டு என்று சொல்லி உள்ளது. இந்தியன் வங்கி Vs Satyam Fibres India Private Limited என்ற உச்ச நீதிமன்ற வழக்கில், மோசடியாக ஒரு பத்திரம் பதியபட்டிருந்தால், அதை சட்டப்படி மட்டுமல்ல, அதை தங்கள் உயர்ந்த தன்மையை காக்கவும், வெளிப்படைத்தன்மையை காட்டவும், ரத்து செய்ய உரிமை உண்டு, என்று சொல்லி உள்ளது. இதற்கு கால வரையறை சட்டம் ஒரு தடை அல்ல. ஏனென்றால், மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஒரு பத்திரத்தை பிரிவு 21, General Clauses Act படி, பாதிக்கப்பட்ட ஒரு நபரை, சிவில் நீதிமன்றம் செல்ல சொல்வது தவறானது. பிரிவு 34(3), 35 மற்றும் விதி 55 பதிவு சட்டபடி, யார் ஒருவர், சார்பதிவாளர் முன்பு ஆஜராகி, அந்த பத்திரம் தவறாக பதியப்பட்டுள்ளது என்று சொன்னாலும், அதை சார்பதிவாளர் பரிசீலிக்க வேண்டும்.      
இவ்வாறான புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், அதை மாவட்ட பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.  
(a) மாவட்ட பதிவாளர் அதை அதற்கென்று ஒரு register வைத்து, கோப்பிற்கு எடுத்து விசாரிக்க வேண்டும்.
(b) தேவைபட்டால், சம்பந்தப்பட்ட சார்பதிவாலரையும், vao வையும் விசாரிக்கலாம். vao வை, உரிய ஆவணங்களை கொண்டு வர சொல்லி உத்தரவிடலாம்.                                                              (c) உரிய விசாரணைக்கு பிறகு, குற்றம் நடந்திருப்பது தெரிந்தால், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடலாம். மேலும், பிரிவு 49 பதிவு சட்டத்தின்படி, அந்த ஆவணம் செல்லத்தக்கதல்ல என்று இன்டெக்ஸ் 2 இல் குறிப்பு செய்து, உத்தரவிடலாம்.                                                                      (d) இந்த அறிக்கை கிடைத்த உடன், காவல் துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.     
(e) இந்த விசாரணையை இரண்டு மாதத்திற்குள் சார்பதிவாளர் முடிக்க வேண்டும். பார்ட்டி களுக்கு பதிவு தபால் அஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் தபால் அனுப்ப வேண்டும். விசாரணை முடிவை, தனி register மூலம் பதிவு செய்தல் வேண்டும். யாரும் விசாரணைக்கு வராவிட்டால், இருக்கும் ஆவணங்களை வைத்து, ஒரு தலை பட்ச தீர்ப்பு வழங்கலாம். இந்த நடைமுறை, வெளிப்படையாக மோசடியாக பத்திரம் பந்திந்துள்ள விஷயங்களுக்கு மட்டுமே. மற்ற படி, எனக்கு உரிமை உள்ள சொத்தை வேறு ஒருவர் பதிந்து விட்டார் என்ற பிரச்சினைகளுக்கு அல்ல.                                                                    மேலே சொன்னபடி, மோசடி பத்திரம் பதிந்த விஷயத்தை, மாவட்ட சார்பதிவாளர் முறைப்படி விசாரிக்காவிட்டால், அவருக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட சார்பதிவாலருக்கு எதிராகவும், உரிய ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும்.   

இவ்வாறு I.G. Registrar, Circular No. 67 dated 3.11.2011 (C.No. 52338 /C1/2011) இல் சொல்லப்பட்டுள்ளது.

வழக்கமாக தவறான பத்திரம் பதிந்தால், பாதிக்கப்பட்டவரை சிவில் நீதிமன்றம் போக, சார்பதிவாளர் உத்தரவிடுவார். ஆனால், இது பாதிக்கப்பட்டவருக்கு, இரு சுமைகளை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment