Saturday, August 30, 2014

பூமி - ராஜ்சிவா

இது பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா...?

கடவுள் பற்றிப் பேச்சு வரும் போதெல்லாம், கையை உயர்த்தி, "அந்த மேலே உள்ள ஆண்டவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்" என்று சொல்வது வழமையான ஒன்று.

கிரிக்கெட் விளையாட்டில் சிக்ஸர் அடிக்கும் போது கூட, பந்து உயரத்தில் மேலே செல்வதாகப் புரிந்துகொள்வோம். அதேபோல, விமானம் மேலே பறப்பதாகவும், முப்பது மாடிக் கட்டடத்தின் லிஃப்ட் மேலே செல்வதாகவும் புரிந்து கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் நடப்பது என்னவோ வேறு.

பூமியில் மனிதன் ஒருவன் நிற்கும் போது, தான் பூமியில் நிலைக்குத்தாக (Vertical) நிற்பதாகத்தான் புரிந்து கொள்கிறான். ஆனால் அவன் பூமியில் நிற்பது கிடையாக (Horizontal). நிலம் கிடையாகவும், அதன் மேல் நாம் நிலைக்குத்தாகவும் நிற்பதாகவே எப்போதும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையோ தலைகீழானது. யதார்த்தத்தில் நிலமானது நிலைக்குத்தாகவும், நாம் அதில் கிடையாகவும் நிற்கிறோம். பல சமயங்களில் நாம் கீழ் நோக்கிக் கூட நிற்போம்.

பூமியைப் பொறுத்தவரை நாம் வடதுருவத்தில் மட்டுமே நாம் இப்போது நினைத்துக் கொண்டிருப்பது போல மேலே இருப்போம். அது தவிர்ந்த மற்ற இடங்களிலெல்லாம் ஒரு சர்க்கஸ் சாகச வீரனைப் போலத்தான் பூமியுடன் ஒட்டிக் கொண்டு நிற்கிறோம். நாம் 'மேலே கடவுள் இருக்கிறான்' என்று சொல்லிக் கைகளை உயர்திக் காட்டும் போது, அது பூமிக்கு வலப்பக்கமாகவோ, இட,ப்பக்கமாகவோ, கீழ்பக்கமாகவோ கைகளைக் காட்டுவதாக எப்போதும் இருக்கும். கடவுளோ, சொர்க்கமோ பூமிக்கு பக்கவாட்டில் எங்கேயோதான் இருக்கிறது. மேல்பக்கத்தில் இல்லை. தென்துருவத்தில் நின்றுகொண்டு கிரிக்கெட் விளையாடினால், அதில் சிக்ஸர் அடிக்கும் பந்து பூமிக்கு மேலே செல்லாமல், கீழேதான் செல்லும்.
புரிகிறதா....?

நாம் நினைப்பது எல்லாமே உண்மையல்ல, சார்பானவை.
நன்றி

-ராஜ்சிவா-

No comments:

Post a Comment