Saturday, August 9, 2014

ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் கோரிக்கை மனு அளிக்கலாம்!



ஆட்சியர் தகவல்





ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யாமல், இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை விபரங்களை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்க திங்கள் கிழமைதோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் நேரிடையாக வந்து கோரிக்கைகளை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு தரப்பட்ட மக்கள் மாவட்டத்தின் மூலை முடுக்குகளிலிருந்து வருவதால் கால விரயமும், பண செலவும் ஆகின்றது.
சாமான்ய மக்களுடைய எதிர்பார்ப்புகளை கவனத்தில் கொண்டு பொதுப்படையான பிரச்சினைகளை பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் 168 பொது சேவை மையங்கள் மூலமாக தங்களுடைய பொதுப்படையான கோரிக்கைகளை இலவசமாக பதிவு செய்து அதற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை தற்போது 01.8.2014 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் மூலமாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுவான கோரிக்கைகளை (உதாரணமாக குடிநீர் பிரச்சினை, தெரு விளக்கு, பொது விநியோக அங்காடி தொடர்பான கோரிக்கைகள், சுகாதார சீர்கேடுகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான விபரங்கள்) தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் இணையதளம் (online) மூலமாகவும் www.onlinegdp.tn.nic.in என்ற இணைய தளத்திலும் தங்களுடைய கோரிக்கை விபரங்களை தெரிவிக்கலாமென்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.நன்றி : Indian Consumer & Human Rights Foundation ( ICHRF)
onlinegdp.tn.nic.in

No comments:

Post a Comment