இதுவும் உயிர்மையில் வெளிவந்த எனது கட்டுரைதான். 'உண்மை' என்று
நாம் நம்பும் எதுவுமே உண்மையல்ல. எதுவுமே என்றால், எதுவும்..... இப்படிச்
சொல்வதில் நிச்சயம் உங்களுக்கு உடன்பாடு இருக்காது என்பது எனக்குத்
தெரியும். ஆனால் உண்மை அதுதான். அதாவது உண்மையல்லாத உண்மை அதுதான்.
படியுங்கள், பிடித்தால் சொல்லுங்கள்...... -ராஜ்சிவா-
"அட! இது என்ன அபத்தமான கேள்வி? நமது கண்ணுக்குக் காட்சியளிக்கும் அனைத்தும் உண்மையானவைதான். நமக்கு முன்னால் நிகழும் ஒவ்வொன்றும் உண்மையானது. நான் உண்மை. நீங்கள் உண்மை. சூரியன் உண்மை. சந்திரன் உண்மை" என்று நீங்கள் சொல்லலாம். அது தவிர்ந்து, உண்மை என்பதற்கு பல விதமான அர்த்தங்களையும் கற்று வைத்திருக்கலாம். அந்த உண்மைகள் எப்போதும் உண்மையானவைதான் என்றே நீங்களும் நினைப்பீர்கள். ஆனால், நீங்கள் நினைக்கும் எதுவுமே உண்மை இல்லை என்பதுதான் உண்மையான உண்மை என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ன குழப்பமாக இருக்கிறதா..? சரி, உண்மைகள் பற்றி கொஞ்சம் விரிவாக, நாம் அறிவியல் சார்ந்து பார்ப்போமா...?
நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். உங்களைக் கண்ணாடியிலோ, போட்டோவிலோ நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் உருவம் எப்படி இருக்கும் என்று நிச்சயம் உங்களுக்குத் தெரியும். இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கும் உங்கள் முகம், அப்படித்தான் இருக்கிறது என்று உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா? நிச்சயமாக நூறு சதவீதம் அப்படி இருக்கச் சாத்தியமே இல்லை. "இது என்ன அபத்தம்? என் முகத்தைக் கூடவா உண்மையில்லை என்று சொல்கிறீர்கள்?" என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது அபத்தம் இல்லை. கண்ணாடியில் உங்கள் முகத்தை நீங்கள் பார்க்கும் போது, அது உங்கள் முகத்தை இடம் வலம் மாற்றியே காண்பிக்கிறது. நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் போது, முகத்தின் வலது கண், உங்கள் இடது கண்ணாக இருக்கும். நீங்கள் வலது கையை உயர்த்தும் போது, கண்ணாடியில் தெரியும் உங்கள் உருவத்தில் இடது கை உயர்த்தப்படும். எனவே கண்ணாடியில் பார்க்கும் உங்கள் முகத்தை உங்கள் உண்மையான முகம் என்று நினைப்பதே தவறு. இதுதான் உங்கள் முகம் என்று ஒரு குத்துமதிப்பான தோற்றத்தை மூளை உங்களுக்குள் பதிந்து வைத்திருக்கிறது. இப்போ நீங்கள், "மற்றவர்களுக்கு என் முகம் தெரிகிறதுதானே, மற்றவர்களுக்குத் தெரியும் முகம்தான் என் முகம். அவர்கள் பார்க்கும் என் முகம் உண்மைதானே! நான், என் அம்மாவின் முகத்தை என் இரண்டு கண்களாலும் பார்க்கிறேன். அப்படியென்றால் என் அம்மாவின் முகம் உண்மையானதுதானே!" என்று கேட்கலாம். துரதிர்ஷ்டவசமாக அதுவும் உண்மையில்லை. இது புரிய வேண்டும் என்றால், நாம் ஒரு பொருளை எப்படிப் பார்க்கிறோம் என்று தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு பொருளில் இருந்து வரும் ஒளி, நமது கண்ணில் உள்ள வில்லையினூடாகச் சென்று விழித்திரையில் விம்பமாக விழுகின்றது. எப்படி விழுகிறது தெரியுமா? மிகச் சிறியதாகவும், தலைகீழாகவும் விழுகிறது. விழித்திரையில் விழுந்த விம்பம் பார்வை நரம்புகளினூடாக மூளைக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் நமது மூளைதான், அந்த தலைகீழ் விம்பத்தை நிமிர்த்தி, அளவுப் பரிமானங்களைக் கொடுத்து, நாம் பார்த்த பொருள் இதுதான் என்று நமக்கு அறிவிக்கிறது. இந்த இடத்தில், கண்வில்லை, விழித்திரை, பார்வை நரம்புகள், மூளை என்னும் பல விதமான உடலுறுப்புகள் தமது கடமைக்கான பொறுப்புகளை எடுக்கின்றன. ஆனால் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. ஒவ்வொருவரின் கண்வில்லைகளும் தனித்தனியான திறண் (Power) கொண்டவை. ஒவ்வொருவரும் தனியான நிறக்குருடு கொண்டவர்கள். மூளையின் திறனும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவையாகவே இருக்கும். ஆகையால், ஒருவர் பார்க்கும் அதே உருவத்தை மற்றவர் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் பார்க்கும் வடிவம் அடுத்தவர் பார்ப்பது போல இருக்காது. ஆனால் நாம் ஒரே உருவத்தைத்தான் பார்க்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறோம்.
ஒருவர் கண்ணுக்குத் தெரியும் சிவப்பு நிறத்துக்கும், இன்னுமொருவர் கண்ணுக்குத் தெரியும் சிவப்பு நிறத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சிவப்பு நிறம், வெள்ளை நிறத்துடன் சேர்ந்து, கடும் சிவப்பிலிருந்து மெல்லிய சிவப்பு வரை, மொத்தமாக 255 விதமான சிவப்பு நிறங்களைக் கொடுக்கும். நன்றாக உற்றுப் பார்த்தால் அதில் ஒரு சிவப்பு இன்னுமொரு சிவப்பாக இருக்காது. கணிணி பாவிப்பவர்கள் ஃபோட்டோ ஷாப்பில் இந்த நிறங்களைக் காணலாம். சொல்லப் போனால், 255 விதங்கள் மட்டுமல்ல, அதற்கும் அதிகமான சிவப்பு நிறங்கள் உண்டு என்றாலும், நாம் 255 என்பதிலேயே நின்று கொள்ளலாம். இந்தச் சிவப்பு நிறங்கள் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த வேறுபாடுகளுடனே தெரிகிறது. சிவப்பு நிறம் போலவே மற்ற வர்ணங்களும் பல படிகளையுடையவை. இதனால் பார்க்கப்படும் பொருளின் வர்ணங்கள் கூட ஆளாளுக்கு வேறுபடுகிறது. ஒவ்வொருவரும் வேறு வேறானதைப் பார்க்கும் போது, யார் பார்ப்பது உண்மையாகிறது?
இது போலவே, ஒருவர் கேட்கும் ஒலி, நுகரும் வாசனை, உணரும் ருசி எல்லாமே அடுத்தவர்களுடன் ஒப்பிடும் போது வேறு வேறானது. ஒரே அல்வாவை, இரண்டு துண்டுகளாக்கி நானும், நீங்களும் உண்டால், நான் உணரும் இனிப்புச் சுவையை நீங்கள் உணரப் போவதில்லை. அப்படியென்றால் அந்த அல்வாவின் உண்மையான ருசி எது? என்னுடையதா? உங்களுடையதா? கண் பார்வை, நிறக்குருடு, வாசனை இல்லாமை, கேளாமை, நாக்கின் தண்மை ஆகிய குறைபாடுகள் நமக்கு முழுமையாக இல்லாவிட்டாலும், சில வீதங்களில் சிறிதளவேனும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்தக் குறைபாடுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறானது. எவருக்குமே ஒன்று போல இருப்பதில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது மூளையின் கணிப்புத் தண்மை. அது எப்போதும் ஒன்று போல இருக்காது. இவையெல்லாவற்றினாலும் உணர்வதில், யார் உணர்வது உண்மை? அவர் உணர்வதா? அல்லது இவர் உணர்வதா? அல்லது இருவருமே இல்லையா?
ஒரு நீல நிறப் பொருள் நம் கண் முன்னே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பொருளை நீல நிறப் பொருள் என்கிறோம். உண்மையில் அந்தப் பொருள் நீல நிறமானதுதானா? அறிவியலின்படி பார்த்தால், சூரிய ஒளி அந்தப் பொருளில் படும்போது, அது சூரிய ஒளியில் உள்ள அனைத்து நிறங்களையும் உள்ளே உறிஞ்சிவிட்டு, நீல நிறத்தை மட்டும் வெளியே தெறிக்கவிடுகிறது அந்தப் பொருள். அதனால் அந்தப் பொருளை நீல நிறம் என்கிறோம். ஆனால் உண்மையில் அந்தப் பொருள் நீலமா? இல்லை. அது நீல நிறத்தை தெறிக்க விடுகிறது அவ்வளவுதான். இந்த வாதத்தில் உங்களுக்குச் சம்மதம் இல்லாமல் இருக்கலாம். வானம் நீல நிறம் என்கிறோம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? பூமியின் காற்றுவெளி மண்டலத்தினூடாக சூரிய ஒளியின் எல்லா நிறமும் ஊடுருவி வர, நீல நிறம் மட்டும் அங்கே சிதறுகிறது. அதனால் வானம் நீலமாகத் தெரிகிறது. ஆனால், மேலே சென்றால் அங்கே வானம் நீலமாக இருக்காது. அதற்கு மேலே அல்லது கீழே நிற்கும் போது மட்டுமே நீலநிறத்தை நாம் பார்க்கக் முடியும். அத்தோடு, ஒளியில்லாத வானம் கருமையாகவே காட்சியளிக்கிறது.
உண்மை என்பதை இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு வரையறுத்து விட முடியாது. அவை தாண்டிய பல உண்மைகளும் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இந்தக் கூற்றுப் புரிகிறதா என்று பாருங்கள்.
"நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு, இறந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்".
'அது எப்படி நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு, இறந்தகாலத்தை நாம் பார்க்க முடியும்?' என்றுதானே நினைக்கிறீர்கள்? இந்தக் கணத்தில் நாம் பார்க்கும் எதுவுமே இந்தக் கணத்தின் உண்மையல்ல. அது கடந்த காலத்தின் உண்மை. நம் அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் அனைத்துமே இறந்த காலத்துக்குரியவை. என்ன புரியவில்லையா? பரவாயில்லை இதைப் பாருங்கள்.
ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறிப்பதனாலேயே நாம் அந்தப் பொருளைப் பார்க்கிறோம். ஒளிக்கு என ஒரு வேகம் உண்டு. ஒரு செக்கனுக்கு 300000 கிலோ மீற்றர்கள் தூரத்துக்கு ஒளி செல்லும். இந்த வேகத்தை நாம் சாதாரணமாகக் கற்பனையே பண்ண முடியாது. பூமியிலிருந்து சூரியன் 149.6 மில்லியன் கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருக்கிறது. அதனால், சூரியனில் இருந்து வரும் ஒளி, பூமியை வந்து அடைய 8.3 நிமிடங்கள் எடுக்கிறது. அதாவது நாம் தற்சமயம் சூரியனைப் பார்த்தால், உண்மையில் அது இந்தக் கணத்தில் உள்ள சூரியன் இல்லை. 8.3 நிமிடத்துக்கு முந்தியது. ஒரு பேச்சுக்கு, சூரியன் வெடித்துச் சிதறியது என்று எடுத்தால், 8.3 நிமிடங்களுக்குப் பின்னர்தான் நமக்குத் தெரிய வரும். எட்டு நிமிடம் வரை வெளிச்சம். அப்புறமே இருள்.
இப்போ நட்சரத்திரங்களைப் பற்றிச் சற்று யோசியுங்கள்! அவை மிக மிக அதிகத் தூரத்தில் உள்ளன. நமக்கு அண்மையில் இருக்கும் நட்சத்திரம், நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தது 20 ஒளியாண்டுகள் தூரத்திலும், அப்புறம் ஐம்பது ஒளியாண்டுகள். இப்படியே மில்லியன் ஒளியாண்டுகள் தூரங்களில் எல்லாம் நட்சத்திரங்கள் உண்டு. நமக்கு அண்மையில் இருக்கும் நட்சத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் பார்க்கும் அந்த நட்சத்திரம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நட்சத்திரம். காரணம் அந்த நட்சத்திரம் நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதால், அதிலிருந்து வரும் ஒளி நம்மை வந்து அடைய எடுக்கும் காலம் நான்கு ஆண்டுகள். அது வெடித்துச் சிதறினால், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நமக்குத் தெரிய வரும். அதுவரை அந்த நட்சத்திரம் இருக்கிறது என்றே நாம் நம்புவோம். நாம் கண்களால் பார்க்கும் எல்லா நட்சத்திரங்களும் (ஒன்றிரண்டைத் தவிர) நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளவை. அவை வெடித்தாலும் நமது வாழ்நாளில் அது வெடித்தது என்றே தெரியப் போவதில்லை. காரணம் அது தெரிய நூறு ஆண்டுகள் தேவை. இப்போது சொல்லுங்கள், வானத்தில் நாம் காணும் அனைத்துமே இந்தக் கணத்தின் உண்மையல்ல அல்லவா? அவை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை. ஆனால் நாம் இந்தக் கணத்தில் அவை இருப்பதாக நாம் நம்புகிறோம். அதாவது நாம் நிகழ்காலத்தில் இருந்து கொண்டு, இறந்த காலத்தைப் பார்கிறோம். சற்று தொடர்ந்து சிந்தித்துப் பார்த்தால், உங்கள் நண்பன் ஒரு மீட்டர் தூரத்தில் நின்றாலும், அவரின் இறந்த காலத்துத் தோற்றத்தைத்தான் நீங்கள் பார்ப்பீர்கள். நட்சத்திரங்கள் போல ஆண்டுக் கணக்கு இல்லாமல், 3.336 நானோ செக்கன்கள் முன்னர் உள்ள நண்பராக இருப்பார்.
இந்த விசயம் சம்மந்தமான ஒரு விந்தையான தகவலையும் சொல்கிறேன்.........!
பூமியில் இருந்து 2012 ஒளியாண்டுகள் தூரத்தில், பூமி போன்ற ஒரு கோள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிபுத்திசாலிகளான ஏலியன்கள் அங்கு வாழ்கின்றன என்றும் வைத்துக் கொள்ளுங்கள். நம்மை விட அறிவியலில் அதிக வளர்ச்சி கண்டவர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஏலியன்கள் நமது பூமியை பார்க்கும்படியான ஒரு அதிநவீனத் தொலைநோக்கியை (Telescope) வைத்திருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். சும்மா ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொலைநோக்கியால் அவர்கள் பூமியைப் பார்த்தால், பூமியில் இயேசுநாதர் நடமாடிக் கொண்டிருப்பது தெரியும். புரிகிறதா.....? புரியாவிட்டால் பரவாயில்லை விட்டுவிடுங்கள்.
நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் கலங்களால் (Cells) ஆனவை. உடலில் உள்ள பெரும்பாலான கலங்கள் உயிர் வாழ்வது சில நாட்களே! தினமும் நம்முடலில் பல கோடிக் கலங்கள் அழிகின்றன, பல கோடிக் கலங்கள் மீண்டும் புதிதாக உருவாகின்றன. நமது உடலின் ஏதாவது ஒரு உறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
சரி, உதாரணமாக உங்கள் கட்டை விரலை எடுத்துக் கொள்ளுங்கள். நேற்று நீங்கள் பார்த்த கட்டை விரல், இன்று இருக்காது. அந்தக் கட்டை விரலில் தினம் கோடிக்கணக்கான கலங்கள் இறந்து, கோடிக் கணக்கான கலங்கள் புதிதாக உருவாகின்றன. இந்த மாற்ரங்கள் ஒவ்வொரு கனமும் நடைபெறுகின்றன. அப்படியாயின், நீங்கள் ஒருதரம் பார்க்கும் கட்டை விரலல்ல பின்னர் பார்க்கும் கட்டை விரல். அதனால் ஒருநாளில் பார்ப்பதும், அடுத்த நாளில் பார்ப்பதும் வேறு வேறு. ஒரு உறுப்பே இப்படி மாறுகிறது என்றால், உங்கள் மொத்த உடலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இன்று இருக்கும் நீங்கள், நாளை இருக்கும் நீங்கள் கிடையாது. ஆனால் நாம் ஒரே ஆள் என்றே நம்புகிறோம். இதை நீங்கள் ஏற்க மறுக்கலாம். ஆகையால் இப்படிப் பாருங்கள். மூன்று வயதில் இருந்த நீங்கள், இப்போது இருக்கும் நீங்கள் கிடையாது. இந்த மாற்றம் ஒரேயடியாக நடைபெற்ற மாற்றம் கிடையாது. தினம் தினம் ஏற்பட்ட மாற்றங்களின் ஒரு தொகுப்பு.
நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துச் சம்பவங்களையும் மனதில் வைத்துச் சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால், நாம் நினைக்கும் எதுவுமே உண்மை இல்லை என்பது புரிய வரும். ஆனால் அவற்றையே உண்மை என்று நம்பி வருகிறோம்.
-ராஜ்சிவா-

No comments:
Post a Comment