Tuesday, August 12, 2014

'' மூலிகை சாகுபடியை இயற்கை விவசாய முறையில் செய்ய முடியுமா?''


  என்று சங்கர கிருஷ்ணன் என்பவர் கேட்டிருக்கிறார். மூலிகை சாகுபடி வல்லுநர் திருவாரூர் அமுதவல்லி பதில் தருகிறார். 


‘‘மூலிகை சாகுபடியை இயற்கை முறையில் மட்டும் தான் செய்ய வேண்டும்.... செய்யமுடியும். உடல் நலத்துக்காக பயிரிடப்படுகின்ற மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளுக்கு ரசாயன மருந்து மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது தவறானது.
அடிப்படையில் மூலிகைகள் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டவை. எளிதில் பூச்சி, பூஞ்சாண நோய்கள் மூலிகையைத் தாக்குவதில்லை. வணிக ரீதியில் மூலிகை பயிரிடும்போது அதிக விளைச்சல் கிடைக்கவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பார்கள். இதற்கு மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன் படுத்தினால் கூடுதல் விளைச்சல் கிடைக்கும்.
நம்மண்ணில் தானே மலர்ந்து கொண்டிருக்கும் அற்புதங்கள்தான் மூலிகைகள். அழகு, அறிவு, ஆரோக்கியம் போன்றவற்றுக்காக மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவற்றை இயற்கை முறையில் பயிரிடுவதுதான் எல்லோருக்கும் நல்லது.’’ தொடர்புக்கு: 04366-224433.

No comments:

Post a Comment