Tuesday, August 12, 2014

''விவசாய நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்குமா?'


' என்று விழுப்புரம் நகரிலிருந்து பத்மநாபன் கேட்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் வி. மாதவன் பதில் தருகிறார். 

‘‘விவசாயம் வளர்ந்தால்தான் நாடு வளரும் என்பதால் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் புதிதாக நிலம் வாங்க விவசாயிகளுக்கு கடன் கொடுத்து வருகின்றன.


 

























சரியான ஆவணங்களுடன் அருகில் உள்ள வங்கி மேலாளரை அணுகினால் நிச்சயம் கடன் கிடைக்கும். இதில் முக்கியமானது கடன் வாங்குபவர் விவசாயம் செய்பவராக இருக்கவேண்டும். விவசாய கூலி தொழிலாளியாக இருப்பவருக்கும் நிலம் வாங்க கடன் கிடைக்கும். பெட்டிக்கடை வைத்திருக்கிறேன் நிலம் வாங்க கடன் கொடுங்கள் என்றால் தரமாட்டார்கள்.
கடன்தொகையை முழுவதும் செலுத்தும் வரை சம்பந்தப்பட்ட வங்கியிடம்தான் நிலத்தின் பத்திரம் மற்றும் ஆவணங்கள் எல்லாம் இருக்கும். ஏறத்தாழ கடனை கட்டி முடிக்கும் வரை நிலம் வங்கிக்கு சொந்தமானதாகவே இருக்கும். கடன் தொகையை செலுத்திய பிறகு விவசாயியிடம் ஆவணங்கள் அளிக்கப்படும்.
நிலத்துக்கு மட்டுமல்லாமல், விவசாய வளர்ச்சிக்கான பல கடன் திட்டங்கள் வங்கிகளிடம் உள்ளன. அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’’

No comments:

Post a Comment