Tuesday, August 12, 2014

''எகோ டூரிஸம் எனப்படும் பசுமைச் சுற்றுலாவுக்குச் செல்ல விரும்புகிறேன். இது எங்கெங்கு நடக்கிறது... யாரை தொடர்பு கொள்வது?''


என்று சேலத்திலிருந்து ரவி கேட்டிருக்கிறார். பதில் சொல்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் கௌரவ வனஉயிரியல் காப்பாளர் பேராசிரியர் கந்தசாமி.
‘‘பசுமையான சூழலுக்குச் சென்று ரசித்து வருவதுதான் 'எகோ டூரிஸம்'. பெரும்பாலும் காடுகள், மலைகள் சூழ்ந்த பிரதேசங்களில் இது நடக்கிறது. அதிக அளவில் மக்கள் சென்று வராத இடங்களா கத்தான் இவை இருக்கும். வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலம் ஒரு சில இடங்களில் எகோ டூரிஸம் நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு எதுவும் செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் எகோ டூரிஸத்துக்கு செல்லவேண்டும்.
கடந்த 21 ஆண்டுகளாக ஒரு லட்சம் மாணவர்களை காடுகளுக்கு அழைத்து சென்று வந்து இருக்கிறேன். மாணவர்களை ஏன் அழைத்துச் செல்கிறேன் என்றால் வளரும் குழந்தைகளுக்கு காடுகளின் மகத்துவத்தை புரியவைத்தால் போதும் எதிர்காலத்தில் காடுகளை அவர்கள் நேசிப்பார்கள்.
'எகோ டூரிஸம்' என்றால் முதுமலையிலும் ஆனை மலையிலும் யானைகளை பார்ப்பது மட்டுமல்ல. உங்கள் ஊருக்கு அருகில் உள்ள காடுகளுக்குள் நேசிப்புத் தன்மையுடன் சென்று பாருங்கள், அதன் மகத்துவம் புரியும். நாட்டில் நாம் நன்றாக இருப்பதற்குக் காரணம் காடுகள் காயாமல் இருப்பதுதான்.
இந்தியாவில் அனைத்து விதமான காடுகளும் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். அதிலும் அரிய பல உயிரினங்கள் இந்தக்காடுகளில் வாழ்ந்து வருகின்றன.
அண்மையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி காட்டுப் பகுதிகளுக்கு சென்றேன். சில கிலோ மீட்டர் பயணத்துக்குள் ஏராளமான காட்டு விலங்குகளைப் பார்த்தேன். காட்டுக்குள் செல்பவர்கள் விலங்குகளை மட்டும் பார்த்து ரசிக்காமல் செடி-கொடிகளையும் ரசித்து வந்தால்தான் அந்தப் பயணம் முழுமைபெறும். காடுகளை மனமார விரும்புபவர்களுக்கு வழிகாட்ட நான் தயார்.’’
தொடர்புக்கு: அலைபேசி: 94437-39317.

No comments:

Post a Comment