Saturday, August 30, 2014

மறைமுக குற்றங்கள்




நமது நாடு மற்ற நாடுகளை போல் அல்லாமல் நாகரிகத்தின் அடிப்படையிலும், தொன்மையான புவியியல் நில அமைப்பிலும் மிகவும் பழமையான நாடு! தொல்காப்பியம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த மகத்துவம் வாய்ந்த நமது நாட்டில் பல்வேறு அந்நிய நாட்டவர்கள் வந்து பல விசேசங்களை நடத்திவிட்டதன் வாடை தான் இன்றைய கால கட்ட பிரச்சினைகள்! சரி போனது போகட்டும். இனி நாம் புதியதோர் வீதி செய்து உலகை காப்போம்!

நம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சில யோசனைகள்:


  1. மரங்களின் (செடிகளின்) புள்ளிவிவர மேம்பாட்டு திட்டங்கள்
  2. நீர் ஆதாரத்திற்க்கான யோசனைகள் மற்றும் செயல்பாடு
  3. இயற்கை உரத்தினை செலுத்தி நவீன விவசாயத்தை மேம்படுத்தும் திட்டங்கள்
  4. விவசாயம், பாரம்பரிய மருத்துவம், சட்டம், பங்குச் சந்தை போன்றவற்றில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு
  5. கல்வித் திட்டத்தில் தலைகீழ் மாற்றம்
  6. வெளிநாட்டு நிறுவனங்களை நிராகரித்து இந்திய முதலாளிகளை உருவாக்குதல்                 
  7. தொழிற்ச்சாலைகளின் மாசு கட்டுப்பாடு மாற்று முறை
  8. குற்றங்களுக்கான தண்டனையில் மாற்றுத் திட்டங்கள்
  9. வன உயிரினங்களுக்கான புதிய யோசனைகள்
  10. புராதான பொக்கிசங்களை பாதுகாத்தலில், புதுப்பித்தலில், உருவாக்குதலில் புதிய திட்டங்கள்
  11. நாட்டுக்குத் தேவையான திட்டத்தை செயல்படுத்துவதில் மாணவர்களிடம் யோசனைகளை பெறுதல்
என்றோ ஒருநாள் யாரோ சிலர் உருவாக்க முடிந்த சில விசயங்களை, நடைமுறையில் நாம் செயல்பட்டு (அ) செயல் படுத்திக் கொண்டிருக்கின்றோம்! இதன் விளைவு என்னவாயிற்று? நாம் அவர்களினால் உருவாக்கித் தரப்பட்ட சட்டத் திட்டங்களின் பாதுகாப்பில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா? இல்லை அந்த சட்டங்களின் ஓட்டைகளில் ஒளிந்து கொண்டு நம்மை தாக்குபவர்களுக்காக அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? எது உண்மை?
செழிப்பான நம் நாட்டின் மண் வளத்தை கண்டு வியக்காத அயல் நாடுகளே கிடையாது எனலாம். அப்படிபட்ட நமது மண் வளத்தில் வெளிநாட்டு உரத் தொழிற்ச்சாலைகளை நமது நாட்டில் நிறுவி அல்லது இறக்குமதி செய்து, அந்த நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்திணை படிப்பறிவில்லா விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து மருந்தின் வீரியத்தை விவசாயிகளுக்கு கண்கூடாக காட்டி வியாபாரம் செய்துவருகின்றனர். படிபறிவில்லா விவசாயி அதை ஏற்றுக்கொண்டு, தன் நிலத்தின் மண் வளத்தினை தானே அழித்துக்கொள்கிறான். இதற்க்கு தகுந்த விழிப்புணர்வை அரசு மேற்க்கொள்ளவேண்டும். செயற்கை உரத்திலிருந்து இந்தியாவின் மண் வளத்தினை காப்பது அரசின் முக்கிய கடமையாகும்.
விவசாயிகள் மட்டும் அல்ல நகர்ப்புற வாசிகளும் விழிப்புணர்வு பெறவேண்டும். போதிய அளவு கர்ப்பித்தலும், கற்றலும் எங்கு இருக்கின்றதோ அங்கே வளர்ச்சி அபிரிவிதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அரசாங்கம் ஒவ்வொரு ஊரிலும் நன்கு பொதுஅறிவு படைத்த கணிப்பொறியை நன்கு இயக்கும் இளைஞர்களை வேளையில் அமர்த்தி, அவர்களுக்கென தனி அலுவலகம் கொடுத்து, உடனடி தகவல் கொடுக்கும் மையம் என்பதனை அமைத்து மக்களுக்கு சேவை தர வேண்டும். இதன் மூலம் இன்றைய உள்ளூர் சந்தைகளின் நியாயமான விலை நிலவரங்களையும், பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி விலை நிலவரங்கள் மற்றும் வழிவகைகளையும், பொதுமக்களுக்கு சட்ட வழிமுறைகளைப் பற்றிய தகவல்களையும், இயற்கை விவசாயத்துக்கான விழிமுறைகளையும் மேலும் அ முதல் ஃ வரையிலான அனைத்து தகவல்களையும் நகல் எடுத்துக் கொடுத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் இந்த அரசு.
இவ்வாறு மக்களுடன் அரசு நெருங்கிய தொடர்பில் இருந்தால், குற்றங்கள் குறைந்திருக்கும். மாசுக்காற்றை ஏற்படுத்தும் தொழிற்ச்சாலைகள் விவசாய நிலங்களை ஆக்கிரமித்திருக்காது. இயற்க்கை விவசாயம் தழைத்தோங்கியிருக்கும். கணிப்பொறி இலவசமாக கொடுக்கும் செலவில் படிக்காத பாமர மக்களுக்கு அரசு இந்த சலுகையை அளித்திருந்தால் இன்று விவசாய நிலங்கள் விலை போயிருக்காது. தற்க்கொலைகள் இருந்திருக்காது. மண் வளம் மாசடைந்திருக்காது. நிலத்தடி நீர் குறைந்திருக்காது.

அரசு செய்ய வேண்டிய கடமைகள்:

  1. உடனடி தகவல் மையம் ( i office )
  2. அரசு உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சம்பளம் இல்லாமல் அனைத்தும் இலவசம் (ஊழல் தடுப்பிற்காக)
  3. அனைத்து கீழ்மட்ட, நடுத்தர, மேல்மட்ட அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம்
  4. அனைத்து பள்ளிகளும் அரசுடமையாக்குதல். வகுப்பறைகளில் கண்காணிப்பு ஒளிப்பதிவின் மூலம் பெற்றோர்களுக்கு நேரடி ஒளிபரப்பு.
  5. அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு ஒளிப்பதிவு ஆதாரத்துடன் செயல்பட வேண்டும்.
  6. அனைத்து அரசு அலுவலகமும் ஒளிப்பதிவு கண்காணிப்பு
  7. அனைத்து ஆவணங்களும் இணையதள சேவை மூலம் பெறுதல்
  8. விஞ்ஞானிகளின் நேரடி இணைய கண்காணிப்பில் ஊரக ஆராய்ச்சி மையம்.
  9. ஊரக விஞ்ஞான செய்முறை விளக்க மையம் மாணவர்களுக்காக
  10. அரசு திட்டத்தில் தனியார் துறை நுழைய அனுமதி மறுத்தல்
  11. மரம் மற்றும் மூலிகை செடி நட்டு பாதுகாத்து வளர்க்க ஒவ்வொரு ஊரிலும் அலுவலகம்
  12. அரசாங்க செலவினங்களை code no அடிப்படையில் புள்ளி விவரமாக தெரிவிக்கும் நிரந்தர இணையதளம்
  13. Toll gate போன்ற மோசடி செயல்களை கண்டுபிடித்தல்
  14. நூதன திருட்டை கண்டுபிடிக்க research crime center
  15. தேர்ந்தெடுத்த வித்யாசமான சுயத்தொழில் முனைவோருக்கு இலவச அரசு முதலீடு. மேலும் லாபத்தில் அரசுக்கு கணிச பங்கு
  16. மழை நீர் சேகரிப்பு, மரம், காடுகளின் வளர்ச்சி, நிலத்தடி நீர் போன்றவற்றை தினமும் நேரடியாக கண்காணித்து செயல்படுத்த முக்கிய அரசாங்க அலுவலர்      
  17. அனைத்து பயணிகளுக்கும் அரசின் பொது வாகனத்தில் ETicket சேவையை கட்டாயம் அமல் படுத்துதல்.
  18. அனைத்து ஊர்களிலும் அரசு விளையாட்டு ஆள் சேர்ப்பு மையம்
  19. விவசாயத்தில் இடைதரகர்கள் ஒழிப்பு
  20. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் E-cycle கட்டாயம்
  21. இவை அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க MASTER of Gvt SYSTEM இளைஞர்களை நியமித்து அலுவலகம் பராமரிக்க வேண்டும். 

No comments:

Post a Comment