Saturday, August 30, 2014

இது கல்வியா இல்லை வியாபாரமா?



கல்வி ஒருவனை மனிதனாக்கும். பகுத்தறிவாளனாக மாற்றும். புத்திசாலியாக்கும். மனிதனுக்கு கல்வி இல்லாவிடில் அவன் மிருகத்துக்கு நிகராவான்! ஆகையால் கல்வி மிகவும் அவசியம் என்ற கூற்றைத் தவறாகப் பயன்படுத்தி இந்த கல்வியை பயனற்றதாகவும், வியாபாரமாகவும் மாற்றி விட்டார்கள் மனிதர்கள்.

ஆரம்ப காலகட்டத்த்தில் கல்வி மிகவும் பயனுள்ளதாகவும், முறையாகவும் இருந்தது. அந்த கல்விக்கு குருகுலக் கல்வி என்று பெயர். அந்த பாட சாலையில் குரு ஒருவரே! மாணவர்கள் அனைவருக்கும் கற்றுத் தருவது அவரே. ஒவ்வொரு மான்வர்களுக்கும் பனிரெண்டு ஆண்டுகள் கல்வி போதிக்கப்படும். அதில் முதலில் வேதங்களும் அதில் அடங்கிய தர்மங்களும் சிறுவயதிலேயே கற்றுத்தரப்படும்.
அதில் அவர்கள் தேர்ச்சிப் பெற்ற பிறகு, வீரத்திலும் அது சம்பந்தப்பட்ட கலைகளிலும் பயிற்ச்சி தரப்படும். அதிலும் அவர்கள் தேர்ச்சிப் பெற்ற பிறகு அறிவு மற்றும் திறமை சார்ந்த போட்டிகள் நடைபெறும். அதிலும் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்ற பிறகு, ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வயல் கொடுக்கப்படும். அந்த நிலத்தை பண்பட்ட நிலமாக மாற்றி அதில் பயிரிட்டு அதிக மகசூல் யார் அடைகிறார்களோ அதுவே வெற்றியாகும்!
வாழ்க்கையில் மனிதனுக்கு தேவையான அனைத்து அடிப்படை அறிவினையும் குருகுல கல்வியானது கொடுத்துவிடுகின்றது. அதனை பயன்படுத்தி கல்வி கற்றவன் தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். 

இதில் குருவின் பங்கு என்னவென்றால், தன்னிடம் கல்வி பயிலும் மானவர்களின் திறமைகளை சிறுவயதிலேயே கண்டறிந்து, அந்தந்த திறமைக்கேற்ப அவனை அதில் ஈடுபடுத்தி அவனை வீரனாகவோ, புலவராகவோ, சிற்பியாகவோ, ஒற்றனாகவோ, ஒரு நல்ல விவசாயியாகவோ அவனை மாற்றிவிடுகிறார். இந்த கல்வி மூலம் மாணவர்கள் தங்களுக்குத் தகுந்த வழியில் பயணிக்க தொடங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்திற்க்கு இந்த குருகுல கல்வி மிகவும் பயனளித்தது. அதுமட்டுமில்லாமல் அவர்களை சான்றோர்களாகவும் மாற்றியது!

இந்த காலத்தில் ஒழுக்கம் கற்றுத் தரப்படுவதில்லை. ஒழுக்கம் கற்றுத் தருகிறோம் என்று சொல்லி மாணவர்களை மிரட்டி பயமுறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இக்கால மாணவர்களுக்கு அறிவாற்றல் அதிகம் தான். ஆனால் என்ன செய்வது அந்த அறிவாற்றலை வைத்துக்கொண்டு? பயனற்ற வழியில் அல்லவா செல்கின்றது! கணினி சம்பந்தப்பட்ட வேளைகளில் சம்பளம் லட்சக்கணக்கில் வங்கி என்ன பயன்? தங்களுக்கு தானே உணவுத் திட்டம் என்ற ஒன்று வந்தால் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறோம்?

ஒன்றாம் வகுப்பு மானவர்களுக்கு ஏன் லட்சக்கணக்கில் பணம் கேட்கும் பள்ளி கூடங்கள் இருக்கின்றன? சிறந்த சேவையாக கருதப்படும் மருத்துவ கல்லூரி படிப்பை படிக்க ஏன் லட்சக்கணக்கில் பணம் கேட்கும் கல்லூரிகள் இருக்கின்றன? பணத்தை வசூலிப்பது, கல்லூரியில் மானவர்களுக்கு ஆகும் செலவுக்காகவா அல்லது கல்லூரியின் லாபத்திற்க்காகவா? மனசாட்சியுடன் போரிட்டு பாருங்கள் உண்மை நிலவரம் தானாக உருத்தும்!

நான் கல்லூரியில் படிக்கும் போது ஆன செலவானது, இன்று ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது! அப்படி என்ன பொருளாதாரம் சரிவடைந்ததோ தெரியவில்லை கல்வி நிறுவனங்களில்!

கல்வி கற்றுத்தரும் முறைகளில் கூட பல சோதனைகளே மானவர்களுக்கு மிஞ்சுகின்றன. எழுத்து தேர்வு என்பது போலியானது. அனுபவ ரீதியான பயிற்சி தேர்வே மானவர்களுக்குத் தேவை. இதில் வெற்றி அல்லது தோல்வி என்பதே இருக்கத் தேவையில்லை. நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல பாடத் திட்டங்களை மாற்றத் தேவையில்லை. கல்வி முறையையே மாற்ற வேண்டும்! 

  • படித்தவன் தான் விவசாய மண்ணில் தொழிற்ச்சாலை காட்டுகிறான்.
  • படித்தவன் தான் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கின்றான். அதை மண்ணில் போட்டும் புதைக்கின்றான்.
  • படித்தவன் தான் காகித தொழிற்ச்சாலையில் பணி செய்கிறான்.
  • மரங்களை வெட்ட அனுமதிப்பதும் படித்தவன் தான்.
  • படித்தவன் தான் நிலத்தடியில் தண்ணீரை உறிஞ்சி பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து பணமாக்கி காட்டுகிறான்.
  • தொழிற்ச்சாலை, மண்ணால் தாங்க முடியாத அளவுக்கு மாசு, நிலத்தடி நீர் அழிவு, மரங்கள் பூ பூப்பதை நிறுத்தியது, கழிவினை தண்ணீரில் கலப்பது, வாகனங்களில் புகை வெளியிடுவது போன்ற அணைத்துமே படித்தவனாலே நிகழ்த்தப்படுகின்றன!
கல்வி முறையில் மாற்றம் இல்லாததால், இந்த பூமி மனிதனுக்காக படைக்கப்பட்டதாக மனிதன் எண்ணிவிட்டான் என்பது சோகத்திற்க்குரிய அழிவின் தொடக்கமே!

No comments:

Post a Comment