Saturday, August 30, 2014

ஆச்சா மரம்



அரச, ஆல, வேப்ப, கருவை, கருவேப்பிலை, பூவரசு, நாவல், புளிய, மா, பலா, தேக்கு, வாழை, நெல்லி, புங்க, தென்னை, பனை, புன்னை, நாகலிங்கப் பூ, சந்தன மரங்கள் சகஜமாகத் தெரிந்தவை. பார்த்தவை. ஆச்சா மரமா? அதென்ன ஆச்சாரமான மரம் என்று கூகிளில் மூழ்கினேன். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவனுக்கு தெம்பூட்டவும் தனது வில்லாற்றலை காண்பிக்கவும் ஏழு மராமரங்களென்று இராமன் துளைத்தது ஆச்சா மரங்களைத்தானாம். இத்தகைய வலிமையான ஆச்சா மரத்தில்தான் நாகஸ்வரம் தயாரிக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. கம்பனும் ”பெரிய, ஆச்சா, விலங்கு” என்று அர்த்தம் தொனிக்க ”“மா..மா..மா..” போட்டு எழுதிய பாடலை இங்கே பார்க்க: http://www.tamilvu.org/slet/l3710/l3710ame.jsp?st=391&ed=509&mi=2&sno=872 .(Hardwickia binata என்ற பொட்டானிகல் பெயருள்ள ஒரு மரத்தை இந்த ஸ்டேட்டஸின் ஒட்டாகப் பார்க்கிறீர்கள்.)இப்படி இந்த மரம் தேடுகையில் கிடைத்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வனவியல் வலைப்பக்கம் உபயோகமான ஒன்று. (அது இங்கே: http://agritech.tnau.ac.in/forestry/ntfp_hardwickia_binata.html) தமிழிலும் ஆங்கிலத்திலும் மரங்களை மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஆரண்ய வனப்புகளை சங்கிலியாகக் கோர்த்து பார்வைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆச்சா மரம்

அறிவியல் பெயர்: ஆர்டுவிக்கா  ஃபின்னேட்டா

பரவல்: இத்தாவரங்கள் தக்காணபீடபூமி, மத்திய இந்தியா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற இவைகளில் காணப்படுகின்றன.

நாற்றங்கால் நுட்பங்கள்: விதை 24 மணி நேரம் நீரில் ஊறவைக்கப்படுகிறது. சூன் சூலை மாதங்களில் நாற்றங்கால்களில் விதைக்கப்படுகிறது. நாற்றங்கால் படுகைகள் நிழல் பகுதிகளில், நாற்றங்கால் பாத்தியிலோ (அ) பாலிதீன் பைகளிலோ வளர்க்கப்படுகின்றன. நடப்பட்ட (அ) விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு முளைக்கத் தொடங்கும்.

வேர்க்கால் நடவுமுறை: ஏழு வயதுள்ள நாற்றுகளின் அடித் தண்டு 4 செ.மீ. நீள தண்டும் 13-15 செ.மீ. நீளமும் உடையவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

வயல்நடவு: 12 மாத வயதுள்ள நாற்றுகள் (அ) அடித்தண்டு வேர்கள் மழைக்காலங்களில் நடவு செய்யலாம். இந்நாற்றுகள் 4-6 ஆண்டுகளக்குப்பிறகே அதிவேகமாக வளரும்.

பயன்கள்:
  • கட்டை மிகவும் கடினமானது
  • மரப்பட்டைகள் கயிறு தயாரிப்பில் பயன்படுகின்றன
  • இலைகள் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும் பயன்படுகின்றன.
  • வைரம் பாய்ந்த நடுக்கட்டையிலிருந்து ஒலியோ கோந்துகள்  பெறப்பட்டு வண்ணப்பூச்சுகள் தயாரிக்கப்பயன்படுத்தப்படுகின்றன.


நன்றி: வேங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி

No comments:

Post a Comment