இன்று அறிவியலில் ஒரு சாதனை நடந்த ஒரு நாள். சாதிக்க முடியாத ஒன்றை மனிதன் சாதித்த நாள். அது என்ன தெரியுமா?
. உலக வரலாற்றில் முதல் முறையாக, மனிதன் அனுப்பிய விண்கலம், வால் நட்சத்திரம் (Comet) ஒன்றின் ஈர்ப்பு வலயத்துக்குள் புகுந்திருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து (ESA-The European Space Agency), வால் நட்சத்திரமான ‘ட்சூரியை' (Tschuri) நோக்கி 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, ‘ரொசெட்டா’ (Rosetta) என்னும் விண்கலம் அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் பத்து வருடங்களின் பின்னர், எத்தனையோ தடைகளைத் தாண்டித் தான் சென்றடைய வேண்டிய இடமான ‘ட்சூரி' வால் நட்சத்திரத்தின் ஈர்ப்பு வளையத்துக்குள் இன்று (06.08.2014), ஐரோப்பிய நேரம் முற்பகல் 11:06 இற்குச் சென்றடைந்திருக்கிறது.
. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் என்று சொன்னால், அது ரொம்பவும் குறைத்துச் சொல்லப்பட்ட மதிப்பாகவே இருக்கும். பல மில்லியன் கிலோமீட்டர்கள் பயணம் செய்த ‘ரொசெட்டா' இப்போது தனது சரியான குறிக்கோள் இடத்தை அடைந்திருந்தாலும், அது அந்த வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இறங்குவதே அதன் இறுதிக் கட்டமாகும். அதற்கு இன்னும் சில நூறு கிலோமீட்டர்களே மிச்சமாக இருக்கின்றன.
. ‘ரொசெட்டா’ விண்கலம் ட்சூரியின் மேற்பரப்பில் இறங்கியதும், அதனுடனேயே பயணம் செய்து அண்டத்தின் பல அதிசயங்களையும், ரகசியங்களையும் நமக்குப் படங்கள் மூலமாக அனுப்பிக் கொண்டிருக்கும். அதனால், ‘ரொசெட்டா’ விண்கலம், ட்சூரியின் மேற்பரப்பில் எதுவிதச் சேதமுமில்லாமல் தரையிறங்க வேண்டுமென்று அனைவரும் விரும்புகிறார்கள். அது மட்டும் நடந்துவிட்டால், விண்வெளிப் பயண ஆராய்ச்சியில் பல பயனுள்ள தகவல்கள் ரொசெட்டா மூலமாகக் கொட்டும்.
. விரைவில் ரொசெட்டா, ட்சூரி வால்நட்சத்திரத்தில் இறங்கிவிட்டது என்ற செய்தியை நாம் அறிவோம் என்று நம்புவோமாக.
. நவீன அறிவியல் உலகம் நம்பவே முடியாத விசயங்களையெல்லாம் சாதித்துக் கொண்டு வருகிறது. முன்னர் வால் நட்சத்திரங்கள் நமக்கு நல்லது/கெட்டது சொல்லும் ஜோதிடத் தண்மை வாய்ந்த கணக்கியலுக்கே பயன்பட்டன. ஆனால், இப்போது அந்த வால் நட்சத்திரங்களையே மனிதன் தொடப்போகின்றான் என்பது அறிவியலின் நினைத்தே பார்க்க முடியாத வெற்றியாகும்.

No comments:
Post a Comment