Friday, August 29, 2014

இந்துமதம் என்பது வெறும் வரலாறு மட்டுமல்ல!

Induism's photo.
 


 ஆதிசிவனார் அருளிய - "தமிழர்களின் இந்துமதம்" பற்றி 10வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு அவர்களின் விளக்கம்
"இந்துமதம் என்பது வெறும் வரலாறு மட்டுமல்ல! புராண இதிகாசங்கள் மட்டுமல்ல! கதைகளை மட்டும் கொண்டதல்ல!
அற்புதங்களைச் செய்த சித்து விளையாடல் காரர்களால் உருவாக்கப்பட்டது அல்ல!
மந்திர மாயங்களால் உருவாக்கப் பட்டது அல்ல!

நரகத்தைக் காட்டி அச்சுறுத்தியும், சொர்க்கத்தைக் காட்டி இச்சுறுத்தியும் பிறந்ததல்ல! வளர்ந்ததல்ல! வாழ்ந்ததல்ல!

புரியாத மொழிகளில் தெரியாதவைகளைக் கூறி மக்களைக் குருடராக்கிடும் பணியில் ஈடுபட்டதல்ல!

மூடநம்பிக்கைகளையும், கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல!

எந்தத் தனியொரு திருத்தோன்றலையோ (அவதாரங்கள்) அடிப்படையாகக் கொண்டதல்ல!

எந்த ஒரு தனிப்பட்ட நூலாலும் அல்லது வேதத்தாலும் வாழ்வதல்ல!
எந்த ஒரு தனிப்பட்ட கடவுளையோ, கோயிலையோ புகழ்ந்து வாழுவதல்ல! வளருவதல்ல!
அது முழுக்க முழுக்க

$ தத்துவ ஞானிகளையும், தத்துவங்களையும் (The philosophers and the Philosophies),
$ சித்தாந்திகளையும், சித்தாந்தங்களையும் (The Theologists and the Theologies),
$ வேதாந்திகளையும், வேதங்களையும், (The Vedics and the Vedas),
$ விஞ்ஞானிகளையும், விஞ்ஞானங்களையும் (The Scientists and the Sciences),
$ கலைஞர்களையும், கலைகளையும் (The Artists and the Arts),
$ அருளாளர்களையும், அருள்துறைகளையும் (The Divinators and the Divine Fields),
$ கோயில்களையும், கோயில் விஞ்ஞானங்களையும் (The Temples and the Temple Sciences),

இவற்றிற்கெல்லாம் மேலாக கணக்கற்ற கோடிக் கணக்கான தேவர்கள், தேவியர்கள், தேவதைகள், கடவுள்கள், தெய்வங்கள், ஆண்டவர்கள், பட்டவர்கள், எல்லாக்கள், இயவுள்கள், இறைகள், ........ என்று பட்டியலிட முடியாத அருளுலகத்தவர்களையும் வகைவகையாகக் கொண்டு, 1359 அண்ட- பேரண்டங்களிலும் பரவி இருப்பதுதான் இந்துமதம்....... .

அதாவது ஏட்டறிவின் மூலம் மட்டும் இந்துமதத்தை அறிந்து கொள்ள முடியாது, குருவழியாகப் பெறக்கூடிய பட்டறிவாலும், தானே பெறக் கூடிய பயிற்சிகளாலும் தான் இந்து மதத்தைப் படிப்படியாக உணர முடியும்! உணரமுடியும்!! உணரமுடியும்!!!"

இதுதான் 10வது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகம்.

No comments:

Post a Comment