உயிர்மையில் வந்த கட்டுரை இது. இந்த உலகம் நாம் நினைப்பது போல
அவ்வலவு இலகுவானதல்ல. பல சிக்கல்களையும், முடிச்சுகளையும் கொண்டது. அவற்றை
அவிழ்ப்பதற்கு சிலர் முயலும் போது 'கான்ஸ்பிரஸித் தியரிஸ்ட்' (சூழ்ச்சிக்
கோட்பாடு- நன்றி ராஜ ராஜேந்திரன். மனோஜ்) என்று அவர்கள்
அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த கான்ஸ்பிரஸித் தியரிஸ்ட்டுகள்
ஆளுமை உளவர்களுக்கெதிரான தங்கள் முடிவுகளை முன்வைக்க்கும் போது,
உயிராபத்தையும் எதிர் நோக்கியே அவற்றை நமக்குத் தருகிறார்கள். அப்படியே
அலட்சியப்படுத்தி விடமுடியாத சில விசயங்களில் இதுவும் ஒன்று. படித்துப்
பாருங்கள். பிடித்தால் சொல்லுங்கள். -ராஜ்சிவா-
ஒலிம்பிக் விளையாட்டுகள் கி.மு.776ம் ஆண்டு முதன்முதலாக கிரேக்க தேசத்தில் ஆரம்பித்திருக்கிறது என்பது வரலாறு. இது கி.பி 394ம் ஆண்டுவரை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையாக விளையாடப்பட்டு வந்திருக்கிறது. 'புராதன ஒலிம்பிக் விளையாட்டுகள்' (Ancient Olympic Games) என்னும் பெயரில் இதை நாம் இப்போது அழைக்கின்றோம். பல காரனங்களால் இடை நிறுத்தப்பட்ட இந்தப் புராதன ஒலிம்பிக் போட்டிகள், கி.பி.1896ம் ஆண்டிலிருந்து, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, 'குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்' (Winter Olympic), 'கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகள்' (Summer Olympic) என இரண்டு வகையினதாக, மாறிமாறித் தற்போது நடாத்தப்படுகின்றன. இதில் கோடைகால ஒலிம்பிக்தான் மிகவும் பிரபலமானது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் 'லீப்' வருடங்களில் வருவதாக இந்தக் கோடைகால ஒலிம்பிக் அமைந்துவிட்டது.
முதலில் எந்த நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடாத்துவது எனத் தீர்மானிப்பார்கள். இதற்கென 'ஒலிம்பிக் கமிட்டி' (International Olympic Committee) என்ற பெயரில் அமைப்பொன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பே ஒலிம்பிக் சார்ந்த எல்லா விவகாரங்களையும் கவனிக்கும். எந்த நாட்டில் இந்த ஒலிம்பிக் நடத்துவதென இந்தக் கமிட்டி முடிவு செய்கிறதோ, அந்த நாடு அதற்கெனத் தன்னை மிகவும் உற்சாகத்தோடு ஆயத்தப்படுத்தும். ஒலிம்பிக் போட்டிகளுக்காகவே பிரத்தியேகமான விளையாட்டரங்கை அமைப்பதுடன், 'ஒலிம்பிக் கிராமம்' என்ற பெயரில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான இடங்களையும் ஆயத்தம் செய்யும். அத்துடன் அந்த வருட போட்டிக்கென பிரத்தியேகமாக ஒலிம்பிக் அடையாளம் ஒன்றையும் (Logo), உருவப் பொம்மை போன்றதொரு முத்திரைச் சின்னத்தையும் (Mascots) உருவாக்கும்.
இவ்வளவு
சிக்கல்களை உருவாக்கிய இந்த வடிவங்கள் பற்றியும், லண்டன் ஒலிம்பிக்
பற்றியும் பரபரப்பாகப் பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஈரான் நாடு இதை
வெளிப்படையாகச் சொல்லியது மேலும் இதற்கு ஒரு வலுவான அடையாளத்தையும்
கொடுக்கிறது. ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான Jacques Rogge இடம்
நிருபர்கள், "ஈரான் நாடு சயான் எழுத்துகள் ஒலிம்பிக் சின்னத்தில்
இருப்பதாகச் சொல்லி பகிஸ்கரிப்பதாகச் சொல்லியிருக்கிறதே! அது பற்றி நீங்கள்
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்" என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன
பொறுப்பான பதில் இதுதான், "இதைக் கேட்டு நான் சிரிக்க மட்டும்தான்
முடியும்.....".
மனித
வரலாற்றுப் புத்தகத்தின் முடிந்துவிட்ட ஒவ்வொரு பக்கங்களிலும், உலக
நாடுகள் அனைத்தும், பகுதி பகுதியாகவும், தொகுதி தொகுதியாகவும், சேர்ந்தும்,
பிரிந்தும் இருந்து வந்திருப்பது தெரிகிறது. மாபெரும் சாம்ராஜ்யங்களில்
இணைந்தோ, கூட்டாட்சிகளாகவோ, கூட்டமைப்புகளாகவோ, ஒன்றியங்களாகவோ, நாடுகள்
ஒன்றாகச் சேர்ந்திருந்தன. இப்போதும் சேர்ந்து இருக்கின்றன. ஐரோப்பிய
ஒன்றியம், சார்க் நாடுகள், ஐக்கிய அராபியக் கூட்டமைப்பு, ஸ்காண்டினேவிய
நாடுகள், பெனலுக்ஸ் நாடுகள் என்று பலவகைகளில் இந்த நாடுகள் தம்மை ஒன்றாக்கி
வைத்திருக்கின்றன. ஆனால், உலக நாடுகள் அனைத்தும் முழுமையாகச் சேர்ந்து
இருக்கும் அமைப்புகளில் முதன்மையானதாக இருப்பவை, இரண்டே இரண்டு
அமைப்புகள்தான். 1. 'ஐக்கிய நாடுகள் சபை' (United Nations), 2. 'ஒலிம்பிக்
விளையாட்டுகள்' (Olympic Games).
அரசியல் ரீதியாக உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், விளையாட்டு ரீதியாக உலக நாடுகளை ஒன்றிணைப்பதற்கு ஒலிம்பிக் விளையாட்டுகளையும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கின்றன. ஐநா சபை, நாடுகளை ஒன்றாகச் சேர்ந்திருந்தாலும், நாடுகளுக்கிடையில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதுவே, அதன் முக்கிய பணியாகக் கொண்டிருக்கும். அது தவிர்ந்து, நாடுகள் ஒன்றுகூடி, உலக முன்னேற்றத்துக்கும், வளமான வாழ்வுக்கும் ஏதுவான திட்டங்களை உருவாக்கி, அதற்கான தீர்மானங்களையும் இயற்றுவதற்கும் அது துணைபுரியும். ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுகள் அப்படிப்பட்ட ஒன்று அல்ல. உலக நாடுகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு, மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக, ஒரு கோலாகலத் திருவிழாவாவாக அதை நடத்துவார்கள். ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறும் 17, 18 நாட்களுக்கு உலகமே ஒருவித உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் திண்டாடித் திளைக்கும்.
அரசியல் ரீதியாக உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், விளையாட்டு ரீதியாக உலக நாடுகளை ஒன்றிணைப்பதற்கு ஒலிம்பிக் விளையாட்டுகளையும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கின்றன. ஐநா சபை, நாடுகளை ஒன்றாகச் சேர்ந்திருந்தாலும், நாடுகளுக்கிடையில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதுவே, அதன் முக்கிய பணியாகக் கொண்டிருக்கும். அது தவிர்ந்து, நாடுகள் ஒன்றுகூடி, உலக முன்னேற்றத்துக்கும், வளமான வாழ்வுக்கும் ஏதுவான திட்டங்களை உருவாக்கி, அதற்கான தீர்மானங்களையும் இயற்றுவதற்கும் அது துணைபுரியும். ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுகள் அப்படிப்பட்ட ஒன்று அல்ல. உலக நாடுகள் அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு, மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக, ஒரு கோலாகலத் திருவிழாவாவாக அதை நடத்துவார்கள். ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறும் 17, 18 நாட்களுக்கு உலகமே ஒருவித உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் திண்டாடித் திளைக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டுகள் கி.மு.776ம் ஆண்டு முதன்முதலாக கிரேக்க தேசத்தில் ஆரம்பித்திருக்கிறது என்பது வரலாறு. இது கி.பி 394ம் ஆண்டுவரை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையாக விளையாடப்பட்டு வந்திருக்கிறது. 'புராதன ஒலிம்பிக் விளையாட்டுகள்' (Ancient Olympic Games) என்னும் பெயரில் இதை நாம் இப்போது அழைக்கின்றோம். பல காரனங்களால் இடை நிறுத்தப்பட்ட இந்தப் புராதன ஒலிம்பிக் போட்டிகள், கி.பி.1896ம் ஆண்டிலிருந்து, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, 'குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்' (Winter Olympic), 'கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகள்' (Summer Olympic) என இரண்டு வகையினதாக, மாறிமாறித் தற்போது நடாத்தப்படுகின்றன. இதில் கோடைகால ஒலிம்பிக்தான் மிகவும் பிரபலமானது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் 'லீப்' வருடங்களில் வருவதாக இந்தக் கோடைகால ஒலிம்பிக் அமைந்துவிட்டது.
முதலில் எந்த நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடாத்துவது எனத் தீர்மானிப்பார்கள். இதற்கென 'ஒலிம்பிக் கமிட்டி' (International Olympic Committee) என்ற பெயரில் அமைப்பொன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பே ஒலிம்பிக் சார்ந்த எல்லா விவகாரங்களையும் கவனிக்கும். எந்த நாட்டில் இந்த ஒலிம்பிக் நடத்துவதென இந்தக் கமிட்டி முடிவு செய்கிறதோ, அந்த நாடு அதற்கெனத் தன்னை மிகவும் உற்சாகத்தோடு ஆயத்தப்படுத்தும். ஒலிம்பிக் போட்டிகளுக்காகவே பிரத்தியேகமான விளையாட்டரங்கை அமைப்பதுடன், 'ஒலிம்பிக் கிராமம்' என்ற பெயரில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான இடங்களையும் ஆயத்தம் செய்யும். அத்துடன் அந்த வருட போட்டிக்கென பிரத்தியேகமாக ஒலிம்பிக் அடையாளம் ஒன்றையும் (Logo), உருவப் பொம்மை போன்றதொரு முத்திரைச் சின்னத்தையும் (Mascots) உருவாக்கும்.
2012ம்
ஆண்டு நடாத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளை லண்டன் மாநகரில் நடத்துவதென,
ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்தது. இதனால் உற்சாகத்தில் துள்ளிக் குதித்த
இங்கிலாந்து நாடு, போட்டிகளுக்காகத் தன்னைத் தயார் படுத்த ஆரம்பித்தது.
செய்ய வேண்டிய கட்டமைப்புகளை வெகு சிறப்பாக அமைத்துக் கொண்டது. 2012ம்
ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதியே, ஒலிம்பிக் விளையாட்டுகளை லண்டன் மாநகரில்
நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனால், இங்கிலாந்தும் தமக்கென ஒரு
அடையாளத்தையும், முத்திரைச் சின்னத்தையும் தயார்படுத்தியது. குறிப்பிட்ட
அந்தத் திகதியில் வெகுசிறப்பாக விளையாட்டுப் போட்டிகளும் ஆரம்பமாகின.
சொல்லப் போனால், துவக்க நாள் நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாகவும்,
ஆச்சரியமளிக்கும் வகையில் அற்புதமாக அமைந்திருந்தன.
இந்த நேரத்தில்தான் லண்டன் ஒலிம்பிக் பற்றி ஒரு புதுப் புரளி கிளம்பியிருக்கிறது. சாதாரணமான ஒரு புரளியாக இதை ஒதுக்கிவிட முடியவில்லை. காரணம், இந்தப் புரளியை மையமாக வைத்து, ஈரான் நாடு, 'நாங்கள் இந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பகிஸ்கரிக்கிறோம்' என்று சொன்னது. கிளம்பியிருக்கும் புரளியால், விளையாட்டுப் போட்டிகளுக்கு எந்தத் தடைகளும் வரப்போவது இல்லையென்றாலும், இப்படிப்பட்ட புரளி உலகில் உள்ள பலரை, ஒருவித பயத்துடன் சிந்திக்கச் செய்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. உருவாகியிருக்கும் புரளியில் உள்ள நம்பகத்தண்மை பற்றி, இதை எழுதும் எனக்குக் கூடச் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். "அப்படி என்ன புரளி கிளம்பியிருக்கிறது" என்பதை இங்கு நான் சொல்வதற்கு முன்னர் 'ஃப்ரீ மேசன்ஸ்' (Free Masons), 'புதிய உலக ஒழுங்கு' (The New world Order), 'சயான்' (Zion) என்பவை பற்றி நீங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

'புதிய
உலக ஒழுங்கு' (The New World Order) என்னும் அமைப்பு, உலகத்திலுள்ள
பணக்காரர்களையும், அதிகார மையங்களின் தலைமைகளையும், உயர் அந்தஸ்தில்
இருப்பவர்களையும் உள்ளடக்கிய ஒரு இரகசிய அமைப்பு என்று சொல்லப்படுகிறது.
உலகில் நடைபெற்ற பல அரசியல் முன்னணி நிகழ்வுகளுக்குப் பின்னாலும் இந்த
அமைப்பே உள்ளதாகப் பலமாகச் சந்தேகிக்கப்படுகிறது. கோடீஸ்வரர்கள், அரசியல்
தலைவர்கள், மதத்தலைவர்கள் என உச்சஅந்தஸ்தில் உள்ள அனைவரையும் இந்த அமைப்பு
ஒன்றாக இணைத்து வைத்திருக்கிறது என்கிறார்கள். இந்த அமைப்பின் கொள்கை, 'ஒரு
உலகம், ஒரு பணம், ஒரு மதம், ஒரு கடவுள்' என்பதுதான் என்றும்
சொல்கிறார்கள். அத்துடன், இந்த 'New World Order' அமைப்பை, 'ஃப்ரீ மேசன்'
(Free Mason) என்னும் இன்னுமொரு அமைப்புத்தான் கொண்டு நடத்துகிறது என்றும்
சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்பது பற்றி
என்னால் சொல்ல முடியவில்லை. இந்த ஃப்ரீ மேசன் அமைப்பு மிகவும் பிரபலம்
வாய்ந்தது. இது ஒரு இரகசிய அமைப்பு அல்ல. ஆனால், மர்மங்களுக்கும்,
ஆச்சரியங்களுக்கும் அது பெயர் போனது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஃப்ரீ
மேசன் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஃப்ரீ மேசன் அமைப்பு இஸ்ரேல்
நாட்டில் உருவான 'சயான்' (Zion) என்பதுடன் மிகவும் நெருக்கமானது என்றும்
சொல்லப்படுகிறது. சயானும், மேசன்களும் வேறு வேறானதல்ல என்றும்
சொல்கிறார்கள். 'சயான் மேசன்ஸ்' (Zion Masons) என்னும் பெயரிலும் ஃப்ரீ
மேசன்ஸ் இயங்கிவருவதாகவும் சொல்வார்கள். ஃப்ரீ மேசன்களின் மதம், கடவுள்
பற்றிய கொள்கைகளைப் பார்க்கும் போது, ஆச்சரியமான விசயங்கள் நமக்குக்
கிடைக்கின்றன.
கிருஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், 'சாத்தான்' அல்லது 'ஜின்' என்று அழைக்கும் 'லூசிபர்' (Lucifer) என்பவரைத்தான் இவர்கள் கடவுளாக வணங்குகிறார்கள். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை லூசிபர், ஒளியின் கடவுள். அதாவது அறிவின் கடவுள். மனிதனுக்கு அறிவைத் தரும் கடவுளாக லூசிபரைச் சொல்கிறார்கள் மேசன்கள். இதை பைபிளில் உள்ள கதை ஒன்றின் மூலம் நமக்குப் புரியவும் வைக்கிறார்கள்.
ஆதாம், ஏவாள் இருவரையும் படைத்த கடவுள், அவர்கள் இருவரையும் ஏடன் தோட்டத்தில் வாழும்படி அனுமதிக்கிறார். அப்படி அவர்களை அங்கே அவர் விட்டுவிட்டு இருவரையும் பார்த்து, "இந்தத் தோட்டத்தில் உள்ள எல்லா மரங்களின் கனிகளையும் நீங்கள் உண்ணலாம். ஆனால் அந்த அப்பிள் மரத்தின் கனிகளை மட்டும் உண்ணவே கூடாது. மாறாக அதை நீங்கள் புசித்தால், நீங்கள் சாகவே சாவீர்கள்" என்று சொன்னார். கடவுள் சென்றதும் அங்கு பாம்பு உருவத்தில் வந்த சாத்தான் என்னும் லூசிபர், "கடவுள் உங்களுக்குப் பொய் சொன்னார். அந்த அப்பிள் மரத்தின் கனிகள்தான் அறிவைக் கொடுக்கும் கனிகள். அப்பிள் பழங்களை நீங்கள் உண்டால் சாகவே மாட்டீர்கள். அதற்குப் பதிலாக அறிவைப் பெறுவீர்கள்" என்று சொன்னார். லூசிபரின் சொல்லை நம்பி, ஆதாமும், ஏவாளும் அந்த அப்பிள் பழத்தை உண்டனர். அவர்கள் இருவருக்கும், அந்த நிமிடமே அறிவு கிடைக்கிறது. தாங்கள் அதுவரை நிர்வாணமாக இருந்ததும் தெரிகிறது. அதனால் தங்கள் நிர்வாணத்தை மறைக்க இலைகளால் தம்மை மூடிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் கடவுள் சொன்னது போல சாகவுமில்லை. இந்த இடத்தில் கடவுள் கூறியது பொய்யாகவும், சாத்தான் கூறியது உண்மையாகவும் அமைந்து விடுகிறது. மனிதனுக்கு நன்மை செய்யக் கூடிய அறிவைக் கொடுத்தது லூசிபர்தான் என்று ஃப்ரீ மேசன்கள் நம்புகிறார்கள். அதனால் லூசிபரைத் தங்கள் கடவுளாகவும் அவர்கள் வழிபடுகிறார்கள்.

ஃப்ரீ
மேசன்களுக்கு பல குறியீடுகளும், சின்னங்களும் உண்டு. குறிப்பாக 'All
seeing Eye' என்று சொல்லப்படும் 'ஒற்றைக் கண்' ஒன்றும், 'பிரமிட்' போன்ற
அமைப்பும் அவர்களின் சின்னங்களில் முக்கியமானவை. அமெரிக்க ஜனாதிபதிகளில்
பலர் மேசன்களாக இருந்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க
ஜனாதிபதியாக இருந்த 'ஜார்ஜ் வாஷிங்டன்' (George Washington) கூட, ஒரு ஃப்ரீ
மேசனாக இருந்ததற்கு வலுவான சாட்சியங்கள் உண்டு. அது மட்டுமில்லாமல்,
ஜார்ஜ் வாஷிங்டனின் உருவம் பதித்த அமெரிக்க 'ஒரு டாலர்' நோட்டில் மேற்படி
பிரமிட்டும், ஒற்றைக் கண்ணும் அமைந்திருக்கிறது. இது ஒன்றே மேசன்களின்
செல்வாக்கு எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதை நமக்குச் சொல்லும்.
இதற்கும் மேலே ஃப்ரீ மேசன்கள் பற்றி நான் சொல்ல முடியாது. பல விசயங்களை
நேரடியாகச் சொல்வதில் தயக்கம் உண்டு. ஆனால், இணையத் தளங்களில் இது பற்றி
நீங்கள் தேடிப்பார்த்தீர்களானால், நான் சொல்லத் தயங்கும் ஆச்சரியமான பல
தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
இந்த
ஃப்ரீ மேசன்களுக்கும் லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் சம்மந்தம்
உண்டு என்பதுதான், தற்சமயம் கிளம்பியிருக்கும் புரளியாகும். "ஒலிம்பிக்
போட்டிகளிலும் மேசன்களின் ஆளுமையா?" என்னும் குரல்களும் எழும்ப
ஆரம்பித்திருக்கிறது. மேசன்கள், சயான்கள் ஆகியவற்றின் ஆளுமை 2112ம் ஆண்டு
லண்டன் ஒலிம்பிக்கில் இருக்கிறது என்ற காரணம் காட்டி ஈரான் நாடு தாங்கள்
ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள மாட்டோம் என வெளிப்படையாகவே அறிவித்தது
(பின்னர் இங்கிலாந்துக்காக போட்டிகளில் மட்டும் பங்குபற்றுவதென ஈரான்
முடிவெடுத்தது). இப்படி ஈரானே வெளிப்படையாகப் பகிஸ்கரிப்பதாகச் சொன்னதால்,
அந்தப் புரளி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 'இந்த அளவு
பேசப்படும் அந்தப் புரளிதான் என்ன?" என்றுதானே கேட்கிறீர்கள்?
லண்டனில்
நடைபெறும் ஒலிம்பிக் விளயாட்டுக்காக உருவாக்கப்பட்ட சின்னம்தான் (Logo)
மேலே படத்தில் இருப்பது. இந்தச் சின்னத்தைப் பார்த்தால் சாதாரணமாக '2012'
என்பதை ஒரு மாடர்ன் ஆர்ட் முலம் வரைந்தது போல இருக்கும். இந்த லோகோவை
உருவாக்க, நாலு இலட்சம் இங்கிலாந்துப் பவுண்டுகள் கூலியாகக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெருந்தொகையான பணத்தைக் கொட்டிக்
கொடுக்கும் அளவுக்கு அந்த லோகோவில் என்ன இருக்கிறது? சம்மந்தா
சம்மந்தமில்லாமல், ஒழுங்கற்ற முறையில் '2012' என்னும் இலக்கங்கள்
அமைக்கப்பட்டிருப்பதைத் தவிர, அந்தச் சின்னத்தில் எதுவுமில்லை. "இதை
உருவாக்குவதற்கு நாலு இலட்சம் பவுண்டுகளா?" என்னும் வியப்பை நாம் அடைவதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், நாம் நினைப்பது போல, விசயம் அந்த அளவுக்கு
சிறிதானதல்ல. அந்த லோகோவைச் சரியாக உற்றுப் பாருங்கள். '2012' என்பதில்
இரண்டு தடவைகள் '2' என்னும் இலக்கம் இருக்கின்றன. இரண்டுமே ஒரே '2' என்னும்
வடிவமாக இல்லாமல், வேறு வேறு வடிவத்தில் இருக்கின்றன. இது எதற்காக?
அத்துடன் அந்த லோகோவின் நடுவே, சிறிய சதுரமாக புள்ளி போன்ற வடிவம் ஒன்றும்
உள்ளது. அது எதற்காக? ஏன் இந்த லோகோ இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது? இந்தக்
கேள்விகள் பலரின் சந்தேகங்களைக் கிளப்பியது. அதை ஆராய்ந்த சிலர் அதற்கான
காரணங்களைக் கண்டு சொன்ன போதுதான் பலர் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சி
என்ன தெரியுமா? '2012' என்று இருப்பது உண்மையில் '2012' என்பதே அல்ல, அது
'ZION' என்னும் ஆங்கில எழுத்துகள் என்கிறார்கள்.
'ZION'
என்னும் எழுத்துத்தான் அது என்று சத்தியம் பண்ணாத குறையாக அடித்துச்
சொல்கிறார்கள் அவர்கள். இதையே ஈரான் நாடும் சுட்டிக்காட்டியது. இது
தற்செயலாக அமைந்ததாக இருக்குமோ என்று பார்த்த போது, இன்னுமொரு
அதிர்ச்சியும் கூடவே வந்து சேர்ந்தது. ஒலிம்பிக் விளையாட்டுக்கு என பொம்மை
வடிவத்தை உருவாக்குவார்கள் அல்லவா? அந்தப் பொம்மை வடிவத்தில் வந்தது அந்த
அதிர்ச்சி. லண்டன் ஒலிம்பிக்குக்காக உருவாக்கிய பொம்மை எப்படி இருந்தது
தெரியுமா? தலையென்ற ஒன்றே அந்தப்பொம்மைக்கு இருக்கவில்லை. இருந்ததெல்லாம்
ஒரே ஒரு கண் மட்டும்தான். அந்தக் கண்தான் அந்தப் பொம்மையின் தலையும் கூட.
இது எதற்கு, ஒரு கண் மட்டும் என ஆச்சரியமாகப் பார்த்த போதுதான், அந்தக் கண்
பற்றிய இரகசியமும் புரியவந்தது. மேசன்கள் பயன்படுத்தும் 'ஒற்றைக் கண்'
அடையாளம்தான் அது என்கிறார்கள் இது பற்றி ஆராய்ந்தவர்கள். இந்தக் கண்ணை
மேசன்களின் 'All seeing Eye' என்கிறார்கள் அவர்கள். அவர்கள் சொன்னதை
வைத்துப் பார்த்த போது, நமக்கும் அந்தச் சந்தேகம் வருவதைத் தடுக்க
முடிவதில்லை. காரணம், 'முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் என்ன
சம்மந்தமோ', அந்தச் சம்மந்தம்தான் தலையில்லாமல், கண் தலையாயிருக்கும்
பொம்மைக்கும், ஒலிம்பிக்குக்கும் சம்மந்தமாக இருக்கும். அது அப்படி
இல்லையென்றால், எதற்காக இந்த ஒற்றைக் கண் பொம்மை? யதார்த்தமே இல்லாமல், ஒரு
கண்ணுடன் ஏன் அது உருவாக்கப்பட்டிருக்கிறது? மீண்டும் கேள்விகள் நம்மைத்
துளைக்கின்றன. அது மட்டுமல்ல, அந்தப் பொம்மையின் உடல் கீழிருந்து மேலாக
பிரமிட் வடிவில் சிறிதாகி, அதன் உச்சியில் ஒரு கண் அமைந்தது போல
இருக்கிறது. இது அச்சு அசலாக ஃப்ரீ மேசன்களின் ப்ரமிட்டில் இருக்கும்
கண்ணைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. அதை நீங்களும் பாருங்கள்.
இத்துடன்
முடிந்துவிடவில்லை சந்தேகங்கள். ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம்
அமைக்கப்படும் போது, அதற்கு ஒளிதரும் விளக்குகள் அமைப்பார்கள் அல்லவா? அதன்
வடிவில் வந்தது அடுத்த சந்தேகம். இதுவரை ஒளிவிளக்குகள் பல வடிவங்களில்
அமைக்கப்பட்டிருக்கின்றன. பல விளக்குகள் ஒன்று சேர்ந்த கூட்டு
விளக்குகள்தான் அந்த அரங்க ஒளிவிளக்காக இருக்கும். எப்படி அமைத்தால் பல
விளக்குகளைக் கூட்டாக அமைக்கலாம் என்பதே அங்குள்ள தொழில்நுட்பமாகவும்
இருக்கும். ஆனால் லண்டன் ஒலிம்பிக்கில் மட்டும் மிகக் குறைந்த விளக்குகள்
கூட்டாக அமையும் வண்ணம் அரங்க விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. அதன் வடிவம்
பலரை ஆச்சரியப்படுத்தியது. ஏன் இப்படியான வடிவத்தில் விளக்குகள்
பூட்டப்பட்டன? என்ற கேள்வியக்குப் பதிலைத் தேடச் சிரமமிருக்கவில்லை. எந்த
வடிவதில் அமைத்தால் மிகக்குறைவான விளக்குகள் இருக்குமோ, அந்த வடிவத்தில்
அமைக்கப்பட்டிருந்தன அரங்கத்து விளக்குகள். அந்த வடிவம் என்ன தெரியுமா?
'பிரமிட்' வடிவம். ஒரு பிரமிட்டினூடாக ஒளி வருவது போல, லண்டன்
ஒலிம்பிக்கின் அரங்க ஒளியமைப்புகள் இருக்கின்றன. இது பட்டவர்த்தனமாக
மேசன்களின் ஒளிதரும் பிரமிட்டுகள்தான் என்று அவர்கள் அடித்துச்
சொல்கிறார்கள். மேசன்களின் பிரதான அடையாளமாகக் கருதப்படுவதே இந்தப்
பிரமிட்டுத்தான் என்பது உங்களுக்கும் தெரியும் அல்லவா? அந்த ஒலிம்பிக்
அரங்க விளக்குகளின் படங்களையும் பாருங்கள்.
No comments:
Post a Comment