Saturday, August 30, 2014

மஹாசிவராத்திரி



 மஹாசிவராத்திரியான அன்று  அனைவரும் இரவு முழுவதும் கண்விழித்து இறைவனை வணங்கி பூசை செய்து வழிபடுவார்கள்.ஆனால் சித்தர்கள் கூறும் உண்மையான மஹாசிவராத்திரி என்பது வேறு.

இந்நாளில் பிரபஞ்சத்திலிருந்து ஆற்றல் மிக்க கதிர்வீச்சுக்கள் பூமியை வந்தடையும் என்பதை உணர்ந்திருந்த சித்தர்கள் இதை தங்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினர்.

மஹாசிவராத்திரி அன்று கண்விழித்து இறைவனை வழிபடுவதென்பது உண்மைதான்.ஆனால் அவர்கள் கூறியது புறக்கண்ணை அல்ல, ஆம் நம் அகக்கண்ணை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்து அந்த விழிப்பு நிலையுடன் செய்யக் கூடிய மனம் ஒன்றிய தியான நிலையைதான்.

மஹாசிவராத்திரி அன்று செய்யும் தியானமானது, நாம் தொடந்து மூன்று மாத காலம் செய்யும் கடும் தவத்தினால் ஏற்படக்கூடிய ஆன்ம அறிவை, யோக சித்தியை இந்த ஒரே நாளில் விழிப்பு நிலையுடன் செய்யக் கூடிய மனம் ஒன்றிய தியான நிலையால் பெற முடியும். இதை உணர்ந்த சித்தர்கள் இதை தங்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர்.
நாமும் அந்த மனம் ஒன்றிய தியான நிலையின் மூலம் அந்த ஆற்றலை பெறுவோமாக !!

No comments:

Post a Comment